யோவ்.. அப்போ நானும் சின்னபொண்ணு.. – பத்திரிகையாளரின் கேள்வியால் கடுப்பான ஊர்வசி..!

Author: Vignesh
14 June 2023, 2:45 pm

நடிகை ஊர்வசி, சினிமாவில் நடிப்பதை விரும்பாதவர், 9ஆம் வகுப்பு படிக்கும் போது தனது சகோதரி கல்பனாவுடன் படப்பிடிப்பு தளத்திற்கு சென்றுள்ளார்.

அப்போது முந்தானை முடிச்சு படத்தின் போது பாக்யராஜ் அவர்கள் ஊர்வசியை தேர்வு செய்து சம்மதம் வாங்கி நடிக்க வைத்தனர். வேறு வழியில்லாமல் படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டவர் தற்போது வரை சினிமாவில் நடித்து வருகிறார்.

urvashi-updatenews360

அவர் மலையான நடிகர் மனோஜ் கே ஜெயனை காதலித்து கடந்த 2000ஆம் ஆண்டு திருமணம் செய்தார். 2001 ஆம் ஆண்டு இவர்களுக்கு மகள் பிறந்தது.

அதன் பின்னர் 2008ஆம் ஆண்டே இருவருக்கும் விவாகரத்தானது. விவாகரத்துக்கான காரணத்தை கேட்ட போது, ஊர்வசி மது பழக்கத்திற்கு அடிமையாகிவிட்டார் என கணவர் கூறியது சர்ச்சையை ஏற்படுத்தியது.

urvashi-updatenews360

இது குறித்து அப்போது பேசிய ஊர்வசி, மனோஜ் கே ஜெயன் மற்றும் அவரது குடும்பத்தார் கூட்டாக அமர்ந்து மது அருந்துவார்கள். அவர்களால் தான் எனக்கும் மது அருந்தும் பழக்கம் ஏற்பட்டது என பகீர் குற்றச்சாட்டையும் வைத்தார்.

இதன் பின் 2013ஆம் ஆண்டு சென்னை பொறியாளரை திருமணம் செய்தார். அவர்களுக்கு 2014ஆம் ஆண்டு ஒரு மகன் பிறந்தார். தற்போது வரை அவர் தொடர்ந்து சினிமாவில் கவனம் செலுத்தி வருகிறார்.

urvashi-updatenews360

தமிழில் காசேதான் கடவுளடா, அப்பத்தா, யானை முகத்தான் உள்ளிட்ட சில படங்களில் நடித்து வருகிறார். தமிழ், மலையாளம், கன்னடம், தெலுங்கு என 600 திரைப்படங்களுக்கு மேல் நடித்துள்ளார்.

இந்நிலையில், பேட்டியின் போது பத்திரிக்கையாளர் ஒருவர் தான் சிறுவயதாக இருக்கும் போது உங்களை பேட்டி எடுத்தேன் என்று தெரிவித்திருந்தார். அதற்கு உடனே கடுப்பான ஊர்வசி யோ, நானும் அப்ப சின்ன பொண்ணு என்ன வயசான மாதிரி பேசுற என்று நக்கலாக தெரிவித்தார்.

urvashi-updatenews360

மேலும் பேசுகையில் பத்திரிக்கையாளர் உங்களுடைய இளமைக்கு என்ன காரணம் என்று கேட்கையில், சிரிக்கக்கூடிய எந்த ஒரு தருணத்தையும் விட்டு வைக்கவில்லை என்று ஊர்வசி பதில் அளித்தார். அந்த வீடியோ தற்போது இணையதளத்தில் வைரலாகி வருகிறது

  • Kudumbasthan Movie Blockbuster Hit பட்டையை கிளப்பும் குடும்பஸ்தன்…அதுக்குள்ள சின்னத்திரையில்.. வெளியான மாஸ் அறிவிப்பு..!!