அது எனக்கு கெளரவம்.. பாலையா சர்ச்சை நடனம் குறித்து ஊர்வசி ரவுத்தெலா விளக்கம்!
Author: Hariharasudhan17 January 2025, 2:23 pm
பாலையா உடனான சர்ச்சைக்குள்ளான நடன அசைவுகள் குறித்து நடிகை ஊர்வசி ரவுத்தெலா விளக்கம் அளித்துள்ளார்.
ஹைதராபாத்: இயக்குநர் பாபி இயக்கத்தில், பாலையா நடிப்பில் வெளியாகியுள்ள திரைப்படம் டாக்கூ மஹாராஜ். இப்படம் வெளியாகி நான்கு நாட்களில் 100 கோடி ரூபாய்க்கு மேல் வசூல் செய்து நல்ல வரவேற்பைப் பெற்றது. மேலும், இப்படத்தில் பாலையா உடன் நடிகை ஊர்வசி ரவுத்தெலா நடனமாடிய பாடல் ஒன்றும் ரசிகர்களால் கொண்டாடப்பட்டது.
அதேநேரம், அந்த நடன அசைவுகள் சர்ச்சையை ஏற்படுத்தியது. அதுமட்டுமல்லாமல், அப்படம் வெளியானவுடன் நடைபெற்ற பார்ட்டி ஒன்றில் பாலையா, ஊர்வசி ஆகிய இருவரும் அதே மாதிரி நடனமாடினார்கள். இந்த வீடியோ வைரலாகி மீண்டும் சர்ச்சையை உருவாக்கியது.
இந்த நிலையில், இந்த சர்ச்சை குறித்து ஊர்வசி ரவுத்தெலா அளித்துள்ள விளக்கத்தில், “பாலையா உடன் ஆடுவது தொடர்பாக எந்த ஒரு பெர்பார்மன்ஸ் ஆக இருந்தாலும், அது குறித்த பலதரப்பட்ட கோணங்களை நான் மதிக்கிறேன். அவரைப் போன்ற ஒரு ஆளுமையுடன் பணிபுரிவது மிகப்பெரிய ஒரு கெளரவம்.
அந்த அனுபவம் என்பது ஒத்துழைப்பு, பரஸ்பர மரியாதை மற்றும் கலையின் மீதான ஆர்வமே. பாலையா உடன் அந்த நடனம் என்பது, என்னைப் பொறுத்தவரை வெறும் பெர்பார்மன்ஸ் மட்டுமல்ல, அது கலை, கடின உழைப்பு மற்றும் கலை மீதான மரியாதை.
இதையும் படிங்க: தள்ளாடும் வயதில் மானாட மயிலாட பார்த்தவர் கலைஞர் : செல்லூர் ராஜூ விமர்சனம்!
மேலும், அவருடன் பணிபுரிவது என்பது எனக்கு ஒரு கனவு. ஒவ்வொரு ஸ்டெப்பும், ஒவ்வொரு அசைவும் அழகான ஒரு விஷயத்தை உருவாக்குகின்றது” எனத் தெரிவித்துள்ளார். தற்போது ஊர்வசியின் இந்த விளக்கத்தையும் இணையவாசிகள் வறுத்தெடுத்து வருகின்றனர்.