நல்லா தேடுறாங்கய்யா ‘பப்ளிசிட்டி’.. ரிஷப் பண்ட் விபத்திற்கு பின் நடிகை போட்ட பதிவால் வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள்..!

Author: Vignesh
31 December 2022, 10:15 am

கார் விபத்தில் இந்திய கிரிக்கெட் வீரர் ரிஷப் பண்ட் சிக்கிய போது, அவரது பணம் கொள்ளையடிக்கப்பட்டதாக தகவல் வெளியானது குறித்து போலீசார் விசாரணை நடத்தியுள்ளனர்.

இந்திய கிரிக்கெட் வீரர் ரிஷப் பண்ட் இன்று அதிகாலை டெல்லியில் இருந்து தனது சொகுசு காரின் மூலம் உத்தரகாண்ட்டில் உள்ள ரூர்க்கியில் இருக்கும் தனது வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார்.

புத்தாண்டை தனது குடும்பத்துடன் கொண்டாடவும், தாயாருக்கு சர்ப்பைரஸ் கொடுக்கும் நோக்கில், காரை பண்ட்டே ஓட்டிச் சென்று கொண்டிருந்தார்.

டெல்லி – டேராடூன் நெடுஞ்சாலையில் திடீரென்று கட்டுப்பாட்டை கார் இழந்த கார், தாறுமாறாக ஓடி சாலை தடுப்பில் மோதி சில அடி தூரம் சென்று நின்றது. இந்த விபத்தில் ரிஷப் பண்ட்டின் தலை, முதுகு, கால் ஆகியவற்றில் காயம் ஏற்பட்டது. சாலை தடுப்பில் மோதிய வேகத்தில் காரில் திடீரென தீப்பிடித்தது. அதிர்ஷ்டவசமாக கார் கண்ணாடியை உடைத்து அவர் வெளியே வந்தார்.

காரில் இருந்து ரிஷப்பண்ட் உடனே வெளியேறியதால் காயத்துடன் தப்பினார். விபத்து குறித்த தகவலறிந்து சம்பவ இடத்துக்கு சென்ற போலீசார், ரிஷப் பண்டை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். ரிஷப் பண்டுக்கு காலில் எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

இதனிடையே, ரிஷப் பண்ட் ஓட்டிச்சென்ற கார் விபத்துக்குள்ளான சிசிடிவி காட்சிகள் தற்போது வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Urvashi Rautela - updatenews360

இந்த நிலையில் பாலிவுட் நடிகை ஊர்வசி ரவுடேலா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது புகைப்படம் ஒன்றை பகிர்ந்து ரிஷப் பண்டை சூசகமாக குறிப்பிடும் வகையில் பதிவு ஒன்றை போட்டுள்ளார்.

அந்த பதிவில் ஊர்வசி ரவுடேலா ‘பிரார்த்தனை செய்துகொண்டு இருக்கிறேன்’ என்று குறிப்பிட்டுள்ளார். ஊர்வசி ரவுடேலாவின் இந்த பதிவு ரிஷப் பண்டை தான் குறிப்பிடுகிறது என்று ரசிகர்கள் பலரும் திட்டி தீர்த்து வருகின்றனர்.

கடந்த சில மாதங்களுக்கு ஊர்வசி ரவுடேலா முன்பு ரிஷப் பண்டை மறைமுகமாக கேலி செய்து பல பதிவுகளை போட்டு வந்தார். சமீபத்தில் செய்தியாளர்களை சந்தித்து பேட்டி கொடுத்த அவர் தன்னை சந்திப்பதற்காக கிரிக்கெட் வீரர் ஒருவர் 12 மணி நேரத்திற்கு மேலாக என்னை சந்திப்பதற்காக காத்துக் கொண்டிருந்தார். ஆனால் நான் தூங்கி எழுந்து இப்போது அவரை சந்திக்க முடியாது மும்பை வந்து சந்திக்க சொல்லுங்கள் என்று சொன்னேன் என்று கிரிக்கெட் வீரர் ரிஷப் பண்டின் பெயரை குறிப்பிடாமல் RP என்று மறைமுகமாக அவரைப் பற்றி கூறி பேட்டி கொடுத்திருந்தார்.

Urvashi Rautela - updatenews360

இதனை அடுத்து மற்றொரு பதிவில் தம்பி போய் பந்து விளையாடு என்று வடிவேலு தோனியில் கலாய்த்திருக்கிறார். இந்த பதிவு ரிஷப் பண்ட் ரசிகர்களே கோவத்தின் உச்சிக்கே கொண்டு போய் சேர்த்தது என்று சொல்லலாம். இப்படி ஒரு நிலையில் ரிஷப் பண்ட் விபத்தில் சிக்கி மருத்துவமனையில் அனுமதிக்கப்ட்டு இருக்கும் நிலையில் ஊர்வசி போட்டு இருக்கும் இந்த சூசக பதிவை கண்டு ரசிகர்கள் பலரும் ஒருவரின் இந்த நிலையில் கூட அவரை வைத்து விளம்பரம் தேடுவது கேவலமாக இருக்கிறது என்று திட்டி தீர்த்து வருகின்றனர்.

  • Nayanthara and Vignesh Shivan பாவம் விக்கி.. நயன்தாராவை திருமணம் செய்துவிட்டு கூஜா தூக்குறார்.. பிரபலம் விளாசல்!
  • Views: - 511

    0

    1