LOVE சீன் GLAMOUR சீன் பண்ண கூச்சப்பட்ட பிரபல நடிகை.. கமல் கொடுத்த வேற மாதிரி அட்வைஸ்..!
Author: Vignesh10 June 2024, 5:48 pm
உலக நாயகன் கமல்ஹாசன் நடிப்பில் 1996 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம் இந்தியன். ஷங்கர் இயக்கிய இப்படத்தில் கமல்ஹாசன், மனிஷா கொய்ராலா, சுகன்யா, நாசர், கவுண்டமணி, செந்தில் மற்றும் பலரும் நடித்திருந்தார்கள். இப்படம் 1995-ல் வெளியான பாட்ஷா பட வசூலை முறியடித்து சாதனை படைத்தது. இது கமல்ஹாசன் இரட்டை வேடத்தில் நடித்து பெரிதும் வெற்றிபெற்ற திரைப்படத்தின் இரண்டாம் பக்கம் தற்போது தயாராகி ரிலீசுக்கு தயாராகியுள்ளது.
மேலும் படிக்க: திருமணமான நடிகையுடன் பஜக்.. பஜக்.. ஜிவி பிரகாஷ் சைந்தவி பிரிய காரணமே இதுதான்.. அதிர்ச்சி கொடுத்த பயில்வான்..!
இந்நிலையில், 80 90களில் கொடிக்கட்டி பறந்த நடிகை ஊர்வசி பேட்டி ஒன்றில் கலந்து கொள்கையில், பல்வேறு சுவாரசியமான விஷயங்களை பகிர்ந்துள்ளார். அதில், தான் மலையாளத்திலிருந்து தமிழுக்கு வரவில்லை. தமிழில், இருந்துதான் மலையாள சினிமாவுக்கு சென்று ஊர்வசி என அந்த பெயர் கூப்பிட்டு தான் நான் மலையாளத்திற்கு சென்றேன் என்ற உண்மையை முதன் முதலில் கூறியிருக்கிறார்.
மேலும் படிக்க: நயன் JUMP.. இருடா.. நயன்தாராவை அலேக்காக தூக்கிய விக்கி.. ட்ரெண்டாகும் வீடியோ..!(Video)
மேலும் படிக்க: ராஷ்மிகா தோத்துடும்.. புஷ்பா பாட்டுக்கு நடனமாடி அசத்திய எதிர்நீச்சல் சீரியல் நடிகை..! (Video)
அப்போது, என் உடம்பை பார்த்து தமிழில், இந்தியில் தான் வாய்ப்பு கேட்டார்கள். இந்நி நடிகையை போல உடல் அமைப்பு இருந்ததால், வாய்ப்புகள் வந்தது. ஆனால், நல்ல கேரக்டர்கள் பண்ண வேண்டும் கிளாமர் ரோல் வேண்டாம் என்று இருந்தேன். அதனால், தான் தெலுங்கு சினிமாவில் நான் ஒதுக்கி வந்தேன். கமல் சார் என்னிடம் ஊர்வசி நீங்க நல்லா கேரக்டர் பண்ண ஆசைப்படுகிறீர்கள். லவ் சீன் கிளாமர் சீன் பண்ண கூச்சமாக இருந்தால் கொஞ்சம் மலையாளத்தில் கவனம் செலுத்துங்கள். நல்ல வாய்ப்பு வந்தால் விட்டுவிடாதீர்கள் என்று அட்வைஸ் கொடுத்தார். எனக்கு வாழ்க்கை கொடுத்ததே தமிழ் சினிமா தான் என்று ஊர்வசி தெரிவித்துள்ளார்.