ஷகீலா அந்தமாதிரி பொண்ணுங்க.. உண்மையை வெளியிட்ட நடிகை ஊர்வசி..!
Author: Vignesh13 March 2024, 7:09 pm
பி கிரேட் படங்களில் நடித்து மிகவும் பிரபலமானவர் நடிகை ஷகீலா. மலையாளத்தில் ப்ளே கேள்ஸ் என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமான இவர் கிணரத்தும்பிகள் என்ற மலையாள படத்தில் நடிக்க அது மிகப்பெரிய ஹிட்டடித்தது.
டாப் நாயகர்களின் படம் ரிலீஸ் சமயத்தில் இவரின் படமும் ரிலீஸ் ஆகி பெரிய வசூலை தட்டியது. இதனால் முக்கிய நாட்களில் அவரின் படங்கள் ரிலீஸ் செய்ய தடை செய்யப்பட்டது.
இதனால் சினிமாவில் இருந்து விலகியிருந்த ஷகீலா கடந்த குக் வித் கோமாளி 2 நிகழ்ச்சி மூலம் மீண்டும் கேமரா பக்கம் வந்தார். அந்நிகழ்ச்சி அவர் மீது இருந்து மக்களின் பார்வையை அப்படியே மாற்றியது, அதை அவரும் ரசித்தார்.

குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கலந்து கொண்டு தன்னுடையை கவர்ச்சிக்கரமான பிம்பத்தை உடைத்தெரிந்தார். நடிகை ஷகீலா இந்நிகழ்ச்சிக்கு பின் மிகப்பெரிய அங்கீகாரத்தை பெற்றார். சமீபகாலமாக பிரபலங்களை பேட்டியெடுத்து சில பேட்டிகளில் பல விசயங்களை பகிர்ந்து கொண்டும் வருகிறார்.

இந்நிலையில், நடிகை ஊர்வசி அளித்த பேட்டி ஒன்றில் ஷகிலா ஒரு தமிழ் படத்தில் தன்னுடைய ஆலோசனையின் படி நடித்ததாகவும், அப்போது இந்த கவர்ச்சி படங்களில் நடிக்கும் எண்ணம் அவருக்கு இல்லை என்றும் தெரிவித்தார். மேலும், நன்றாக படித்து நல்ல கலைஞராக ஆசைப்பட்ட சகிலா சில காரணங்களால் அந்த தடம் அப்படியே மாறிவிட்டதாகவும் தெரிவித்திருக்கிறார். மேலும், குடும்ப சூழ்நிலைக்காக பீ கிரேட் படத்தில் நடித்த அவர் அதை விட்டு விடவும் போராடியதாகவும் ஷகிலா பட்ட கஷ்டத்தை நடிகை ஊர்வசி தற்போது பகிர்ந்து உள்ளார்.