ஆணுறை பயன்படுத்தும் போது உஷாரா இருங்க… வெட்கமின்றி கூறிய இலியானா!

Author: Rajesh
20 February 2024, 5:38 pm

தெலுங்கு, இந்தி திரைப்படங்களில் பிரபல நடிகையாக வலம் வருபவர் இலியானா டிகுரூஸ். தமிழில் சில படங்களில் அவர் நடித்திருந்தாலும், நடிகர் விஜய் நடித்த நண்பன் படம் அவருக்கு நல்லாவே கைகொடுத்தது. குறிப்பாக, அந்தப் படத்தில் இடம்பெற்றிருந்த ‘இருக்கானா இடுப்பிருக்கானா’ என்ற பாட்டுக்கு அவர் ஆடிய விதம் அனைவரையும் கவர்ந்தது. முன்னதாக தமிழில் ‘கேடி’ படத்தில் நடித்து அறிமுகம் ஆனார்.

சில ஆண்டுகளுக்கு முன்னர் ஆஸ்திரேலியாவை சேர்ந்த புகைப்பட கலைஞர் அன்ரூ என்பவரை காதலித்து அவருடன் லிவிங் டூ கெதர் வாழ்க்கையை வாழ்ந்து வந்தார். இருவரும் திருமணம் செய்துகொள்ளவிருந்த நேரத்தில் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்துவிட்டார்கள். இதையடுத்து, உடல் எடை கூடிய அவரது புகைப்படங்கள் வெளியாகி ரசிகர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியது. இருப்பினும், அடிக்கடி பிகினி ஆடையில் தோன்றி ரசிகர்களை குஷிப்படுத்தி வருவார்.

இலியானா சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருந்தாலும், தனது தனிப்பட்ட வாழ்க்கை குறித்து எப்போதும் வாய் திறக்காமல் இருந்து வருகிறார். இதனிடையே செபாஸ்டியன் லாரன்ட் மைக்கேல் என்பவருடன் ரகசியமாக டேட்டிங் செய்துவந்தார். அவ்வப்போது இந்த ஜோடியின் புகைப்படங்கள் சமூகவலைத்தளங்களில் கசிந்து காதல் கிசுகிசுக்கப்பட்டது. அந்த நபர் பிரபல பாலிவுட் நடிகையான கத்ரீனா கைஃபின் சகோதரர்.

காதலை வெளிப்படுத்துவதற்கு முன்னரே இலியானா தான் கர்ப்பமாக இருப்பதை அறிவித்து ரசிகர்களுக்கு பேரதிர்ச்சி கொடுத்தார். இதனால் இலியானாவின் கர்ப்பத்திற்கு காரணம் யார்? என்ற கேள்வி எழுந்து பரபரப்பாக பேசப்பட்டது. அதன் பின்னர் இலியானாவுக்கு ஆண் குழந்தை பிறந்தது. இதனிடையே இலியானா திருமணத்திற்கு முன்னர் கர்ப்பமானதை பலர் விமர்சித்து வரும் நிலையில் தற்போது அவர் ஆணுறை குறித்து பேசி மேலும் விமர்சனத்திற்கு ஆளாகியுள்ளார்.

அதாவது, உடலுறவின் போது ஆணுறை பயன்படுத்துபவர்கள் மிகவும் பாதுகாப்பாக இருங்கள் என அறிவுரை கூறியுள்ளார். ஆணுறையை பயன்படுத்துவதற்கு முன் ஒரு முறை கையை வைத்து அதில், ஏதேனும் ஓட்டை இருக்கிறதா? என்று பார்த்துவிட்டு பயன்படுத்துங்கள். ஏன் என்றால், பாதுகாப்பில்லாத உடலுறவினால் வீணாக கர்ப்பமடைந்துவிடுவீர்கள். அதை எண்ணி பின்னாளில் வருத்தமடைவதைவிட முன்கூட்டியே உஷாராக இருங்கள் என அட்வைஸ் கொடுத்துள்ளார். இலியானாவின் இந்த கருத்தை கேட்ட நெட்டிசன்ஸ்…. அப்போ நீங்களும் அப்படி தான் கர்ப்பம் ஆனீங்களா என விமர்சித்து வருகிறார்கள்.

  • again ajith join with adhik ravichandran in ak 64AK 64- திரும்பவும் ஆதிக் ரவிச்சந்திரனோடயா? குட் பேட் அக்லி படத்தில் இடம்பெற்ற Hint!