வாடி வாசலில் களமிறங்கிய இளம் நடிகை…லேட்டஸ்ட் தகவலால் உற்சாகத்தில் ரசிகர்கள்..!
Author: Selvan12 January 2025, 6:16 pm
சூர்யாவை அடக்க போகும் இளம் நடிகை
இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் அடுத்து உருவாக உள்ள திரைப்படம் வாடி வாசல்.நடிகர் சூர்யா இப்படத்தில் நடிக்க இருப்பதாக தகவல்கள் ஏற்கனவே வெளியாகியிருந்த நிலையில் அடுத்ததாக படத்தின் அப்டேட் குறித்து எந்த தகவலும் வெளியே வராமல் இருந்தது.
சமீபத்தில் வெற்றிமாறன் இயக்கத்தில் விடுதலை-2வெளியாகி ரசிகர்களிடையே பெரிதும் வரவேற்பு பெற்ற நிலையில் தற்போது வாடிவாசல் படத்தை கையில் எடுத்து உள்ளார்.
படத்தின் முன் தயாரிப்பு பணிகள் காட்சிகளுக்கான பணிகளும்,VFX வேலைகளும் வெளிநாட்டில் நடைபெற்று வருவதாக படத்தின் தயாரிப்பாளரான கலைப்புலி எஸ் தாணு கூறியிருந்தார்.
இதையும் படியுங்க: அரங்கமே அதிர…ஒட்டுமொத்த உலகமே திரும்பி பார்க்க…மகனுடன் மேடையை பகிர்ந்த அஜித்..!
மேலும் படத்தில் நடிகர் சூர்யா பெரும்பாலான காட்சிகளில் காளையுடன் நடிக்க இருப்பதால் அவர் காளையுடன் பயிற்சிலும் ஈடுபட்டு வருகிறார்.இந்த நிலையில் தற்போது படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக நடிகை ஐஸ்வர்யா லட்சுமி நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
இவர் ஏற்கனவே தமிழில் வெளிவந்த பொன்னியின் செல்வன்,கட்டா குஷுதி போன்ற திரைப்படங்களில் நடித்து ரசிகர்களின் பெரும் ஆதரவை பெற்றார்.தற்போது சூர்யாவுடன் முதன்முதலாக நடிக்க இருப்பதால் வாடிவாசல் திரைப்படம் அவருக்கு மிகப்பெரிய திருப்பு முனையாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.