என் காதுப்படவே கேவலமா பேசிங்கனா – அசிங்கப்பட்டதை ஓப்பனா கூறிய வாணி போஜன்!
Author: Shree25 March 2023, 7:21 pm
நடிகை வாணி போஜன் சினிமாவிற்கு வருவதற்கு முன்னர் கிங்ஃபிஷர் ஏர்லைன்சில் பணிப்பெண்ணாக 3 ஆண்டுகள் பணிபுரிந்தார். இவர் இந்த துறைக்கு வருவதற்கு முன்னர் மாடல் அழகியாக தனது கெரியரை ஆரம்பித்தார். அதன் மூலம் கிடைத்தது தான் சீரியல் வாய்ப்புகள்.

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ஆஹா தொடரில் அறிமுகம் ஆனார். தொடர்ந்து ஜெயா டிவியில் மாயா, சன் தொலைக்காட்சியில் தெய்வமகள் என நடித்தார். இதில் தெய்வமகள் சீரியல் அவருக்கு மிகப்பெரும் அடையாளத்தை ஏற்படுத்தி கொடுத்தது.
அதன் பின்னர் அசோக் செல்வன் நடிப்பில் வெளியான ஓ மை கடவுளே படத்தில் மீரா அக்காவாக நடித்து அனைவரையும் கவர்ந்தார். தொடர்ந்து படங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில் அவரை குறித்து வரும் கிசுகிசுக்களுக்கு பதிலளித்த வாணி போஜன்,
நான் ஒரு முறை ஷூட்டிங்கில் இருந்தபோது, என் காதுப்படவே டெலிவிஷன் ஆர்ட்டிஸ்ட்…டிவி முகம்.. எப்படி சினிமாவில் நடிப்பாங்க என கிண்டலாக பேசினார்கள். அதையும் மீறி நான் அந்த படத்தில் நடித்தேன் என தான் பட்ட அசிங்கத்தை வெளிப்படையாகவே கூறினார்.