16 வருஷம் ஆகியும் மவுஸ் குறையல….. RE- RELEASE’ல் பட்டையை கிளப்பிய “வாரணம் ஆயிரம்”- எத்தனை கோடி தெரியுமா?

Author: Rajesh
28 February 2024, 10:22 am

கெளதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில், 2008 ஆம் ஆண்டு சூர்யா இரட்டை வேடங்களில் நடித்து வெளியான படம் வாரணம் ஆயிரம். இப்படத்தில் சமீரா ரெட்டி, திவ்யா ஸ்பந்தனா மற்றும் சிம்ரன் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். 2006ம் ஆண்டின் பிற்பகுதியில் துவக்கப்பட்ட இத்திரைப்படம் நவம்பர் 14, 2008 ல் உலகம் முழுவதும் வெளியிடப்பட்டது.

தந்தை மகனுக்கிடையேயான சுவையான நிகழ்வுகள் கோர்வையாக கொண்டும் மூன்று விதமான காதல் பயணங்களையும் வெளிப்படுத்தியது. இத்திரைப்படத்தினை ஆஸ்கார் ரவிச்சந்திரன் தயாரிக்க, ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்திருந்தார். இதில் சூர்யா ராணுவ அதிகாரியாக கட்டுமஸ்தான தோற்றத்தில் மிகச்சிறப்பாக நடித்திருப்பார்.

அதே நேரத்தில் சமீரா ரெட்டி மீதான காதலை அவ்வளவு அழகாக வெளிப்படுத்தி பின்னர் அவரது மரணத்தால் பைத்தியமாக அலைவார். அதிலிருந்து மீண்டு தனது தங்கையின் தோழி திவ்யா ஸ்பந்தனாவின் ஒருதலை காதலை ஏற்று இழந்த காதலை மீண்டும் அனுபவிப்பார். பல கோணங்களில் கதை இருந்தாலும் மிகவும் தெளிவாக, அழகாக கோர்க்கப்பட்ட ஒட்டுமொத்த ரசிகர்களை கவர்ந்தது வாரணம் ஆயிரம் திரைப்படம். குறிப்பாக அன்றைய காதலர்களை கொண்டாட வைத்தது.

அதிலும் “அவ என்ன என்ன தேடி வந்த அஞ்சல” பாடல் இன்று வரை பிரபலமான ஒரு பிரேக்கப் பாடல். இந்நிலையில் சுமார் 16 ஆண்டுகள் கழித்து இப்படம் கர்நாடகாவில் மீண்டும் ரீ ரிலீஸ் ஆகியுள்ளது. இப்படம் கர்நாடகாவில் மட்டும் ரூ.1.10 கோடி வசூல் செய்து சாதனை படைத்துள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. 16 வருடத்திற்கு பின்பும் புது படத்தை போன்றே இப்படத்திற்கு ரசிகர்கள் ஆரவாரம் செய்து வருவது வியக்கவைக்கிறது.

  • bussy anand shouted tvk volunteers video viral on internet Chair-அ கீழ வைடா டேய்- விஜய் மீட்டிங்கில் கொந்தளித்து கத்திய புஸ்ஸி ஆனந்த்! வைரல் வீடியோ