ஐஸ்வர்யா மீது விட்டுப்போகாத தனுஷின் கோபம்.. வாத்தி Audio Launch-ல் செய்த செயல்.. குடும்பத்தினர் அப்செட்..!!

Author: Babu Lakshmanan
13 February 2023, 6:18 pm

கடந்த 2004ஆம் ஆண்டு தனுஷுக்கும் ஐஸ்வர்யா ரஜினிகாந்த்திருக்கும் நவம்பர் 18ஆம் தேதி திருமணம் நடைபெற்றது. இந்த தம்பதிகளுக்கு யாத்ரா மற்றும் லிங்கா என்ற இரண்டு மகன்கள் இருக்கிறார்கள்.

தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இருவருக்கும் பிறந்த இரண்டு மகன்களை ரஜினிக்கு ரொம்பவும் பிடிக்கும். அதனால் தன்னுடைய பேரன்களை தன் முன்னே வைத்துக் கொள்ள வேண்டும் என்ற ரஜினி ஆசைப்பட்டார்.

Aishwarya Dhanush - Updatenews360

தனுஷ் ஐஸ்வர்யா இருவரும் கடந்த ஆண்டு தங்களுடைய விவாகரத்தை அறிவித்தவர். திடீரென இருவரும் தங்களுடைய விவாகரத்தை அறிவித்ததால், அனைவரும் அதிர்ச்சியடைந்தார்கள்.

இவர்களுடைய விவாகரத்துக்கு என்ன காரணம் என்று இதுவரை தெரியவில்லை. பல காரணங்கள் கூறப்பட்டு வரும் நிலையில், கமல் ஹாசன் மகள் ஸ்ருதி ஹாசன் தான் இவர்களுடைய விவாகரத்துக்கு காரணமாக இருந்துள்ளார் என கிசுகிசுக்கப்படுகிறது.

இருவரும் பிரிந்த நிலையில், தனுஷின் செயல்பாடுகள் மற்றும் மேடைப் பேச்சுகள் அனைத்தும் ஐஸ்வர்யாவை ஏதாவது ஒரு வகையில் நினைவுபடுத்தும் விதமாக அமைந்து வருகிறது.

aishwarya dhanush - updatenews360

இந்த நிலையில், அண்மையில் நடைபெற்ற வாத்தி படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் கூட, அப்படத்தின் பாடலை பாடி அசத்தினார் தனுஷ். பிறகு, ரசிகர்களிடம் பேசிய அவர், “எனக்காக இங்கு வந்திருக்கும் உங்களுக்கு என்னால் எதையும் செய்ய முடியாது. ஆனால், பாடல் வேண்டுமானால் பாடுகிறேன்,” எனக் கூறினார்.

இதனால், ரசிகர்கள் பெரிதும் மகிழ்ச்சியடைந்தனர். இந்த சூழலில், அவர் இதற்கு முந்தைய படமான திருச்சிற்றம்பலத்தில், ‘நிஜமா நான் செய்த பாவம்,’ என்ற பாடலை பாடி மீண்டும் முனுமுனுப்புகளை உருவாக்கியுள்ளார்.

தனுஷ் பாடிய ஹிட்டான எத்தனையோ பாடல்கள் இருக்க, இந்தப் பாடலை அவர் பாடுவதற்கு காரணம் என்ன..? என்று கேள்வி எழுப்பி வருகின்றனர்.

  • tvk leader vijay statement on waqf amendment bill இதுதான் பாஜகவின் பெரும்பான்மைவாத ஆதிக்க அரசியல்- அறிக்கையால் அலறவிட்ட தவெக தலைவர் விஜய்…