‘வாத்தி’ படத்திற்கு வந்த சிக்கல் ; நீதிமன்றம் வரை சென்ற சண்டை : நீதிபதி சொன்ன பரபரப்பு உத்தரவு

Author: Babu Lakshmanan
7 January 2023, 9:00 pm

“வாத்தி“ பட விநியோக உரிமை குறித்து அதன் தயாரிப்பாளருக்கும், விநியோக உரிமை பெற்ற “ ஆரண்யா சினி கம்பைன்ஸ் ” நிறுவனத்திற்கும் வெளியீடு தேதி தொடர்பாக முரண்பாடு எழுந்த நிலையில், இந்த பிரச்சனை குறித்த வழக்கு இன்று நீதியரசர் சரவணன் அவர்கள் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.

விநியோகாஸ்தர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் படத்தின் விநியோக உரிமை “ஆரண்யா சினி கம்பைன்ஸ் ” நிறுவனத்திடம் உள்ளதாகவும், உரிமை தொகையை உடனடியாக நீதிமன்றத்தில் செலுத்துவதாகவும் தெரிவித்தது.

தயாரிப்பாளர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் படத்தை வேறு நிறுவனத்திற்கு கொடுத்து விட்டதால் “ ஆரண்யா சினி கம்பைன்ஸ் ” நிறுவனத்திற்கு வழங்க முடியாது என வாதிட்டார். தங்களிடம் விநியோக உரிமை இருந்து வருவதால் காப்புரிமை சட்டப்படி வேறு ஒருவருக்கு படத்தை விற்க முடியாது என்று “ ஆரண்யா சினி கம்பைன்ஸ் “ வழக்கறிஞர் மறுத்து வாதிட்டார்.

இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, சட்டப்படி ஒருவரிடம் காப்புரிமை உள்ள நிலையில் வேறொருவருக்கு எப்படி விற்க முடியும் என்று இடைமறித்து கருத்தை தெரிவித்து வழக்கை 23ம் தேதிக்கு ஒத்தி வைத்து உத்தரவிட்டுள்ளார்.

23ம் தேதி நடக்க உள்ள இறுதி வாதங்களை பொறுத்து “வாத்தி “ பட விநியோக உரிமை யாருக்கு என்பது தெரியவரும்.

  • Nayanthara and Vignesh Shivan பாவம் விக்கி.. நயன்தாராவை திருமணம் செய்துவிட்டு கூஜா தூக்குறார்.. பிரபலம் விளாசல்!
  • Views: - 584

    2

    0