மணிகண்டனுக்கு அடித்த ஜாக்பாட்
வடசென்னை படத்தின் இரண்டாம் பாகத்திலிருந்து இயக்குனர் வெற்றிமாறன் மற்றும் நடிகர் தனுஷ் விலகியுள்ளதாக தகவல் கசிந்துள்ளது.
இதையும் படியுங்க: விடாமுயற்சியின் மொத்த வசூலை தூக்கி சாப்பிட்ட ‘டிராகன்’…பாக்ஸ் ஆபிஸ் நிலவரம் இதோ.!
தனுஷ்-வெற்றிமாறன் கூட்டணியில் இதுவரை பொல்லாதவன்,ஆடுகளம், வடசென்னை,அசுரன் போன்ற திரைப்படங்கள் வெளியாகி மிகப்பெரிய ஹிட் அடித்தது.குறிப்பாக,2018ஆம் ஆண்டு வெளியான வடசென்னை படம் கேங்க்ஸ்டர் கதையம்சத்தால் தனி ரசிகர் மன்றத்தையே உருவாக்கியது.

வடசென்னை படத்தில் தனுஷுடன் அமீர்,சமுத்திரக்கனி,ஆண்ட்ரியா,டேனியல் பாலாஜி உள்ளிட்ட பலர் நடிப்பில் மிரட்டி இருப்பார்கள்,சந்தோஷ் நாராயணனின் இசை படத்திற்கு மிகப்பெரிய பலமாக அமைந்தது.
வடசென்னை திரைப்படத்தின் முடிவிலேயே அதன் இரண்டாம் பாகம் உருவாகும் என அறிவிக்கப்பட்டது.இரண்டாம் பாகம் தனுஷ் நடித்த அன்பு கதாபாத்திரத்தின் எழுச்சியை மையமாக கொண்டு உருவாகும் எனவும் தகவல் வெளியானது.மேலும், இந்த படத்தின் பாதி காட்சிகள் 2018ஆம் ஆண்டிலேயே படமாக்கப்பட்டதாகவும் கூறப்பட்டது.
இந்நிலையில்,தனுஷ்-வெற்றிமாறன் இருவரும் தொடர்ந்து பல புதிய திரைப்படங்களில் பிசியாகிவிட்டதால்,வடசென்னை 2 படத்தில் இருந்து வெளியேறிவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
இப்படத்தை வெற்றிமாறனுக்கு பதிலாக,அவரது உதவி இயக்குனர் ஒருவர் இயக்க இருப்பதாக கூறப்படுகிறது.அதுமட்டுமின்றி,தனுஷுக்கு பதிலாக நடிகர் மணிகண்டன் கதாநாயகனாக நடிக்க உள்ளதாக தகவல் பரவி வருகிறது.
குட் நைட்,லவ்வர்,குடும்பஸ்தன் போன்ற ஹிட் படங்களை கொடுத்த மணிகண்டன்,வடசென்னை 2 திரைப்படத்தில் ஹீரோவாக நடிக்க இருக்கும் செய்தி தற்போது கோலிவுட்டில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது,ஒரு வேளை மணிகண்டன் இப்படத்தில் நடித்தால்,அவருக்கு வடசென்னை-2 மிகப்பெரிய திருப்புமுனையை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.