தமிழக அரசியல் வரலாற்றில் யாருக்கும் கிடைக்காத ஒரு மிகப்பெரிய பெயர் கேப்டனுக்கு கிடைத்துள்ளதாக மறைந்த விஜயகாந்தின் மனைவி பிரேமலதா தெரிவித்துள்ளார்.
உடல்நலக்குறைவால் காலமான தேமுதிக தலைவர் விஜயகாந்த்தின் உடல் தீவுத்திடலில் பொதுமக்களின் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. திரையுலக பிரபலங்கள், அரசியல் தலைவர்கள் மற்றும் பொதுமக்களின் அஞ்சலிக்கு பிறகு அவரது உடலுக்கு 72 குண்டுகள் முழங்க அரசு மரியாதை செலுத்தப்பட்டது.
பின்னர், குடும்ப வழக்கப்படி இறுதிச்சடங்குகள் செய்யப்பட்டு, விஜயகாந்தின் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது.
இதன்பிறகு, தமிழக அரசு, தொண்டர்கள் மற்றும் ரசிகர்களுக்கு பிரேமலதா விஜயகாந்த் நன்றி தெரிவித்துக் கொண்டார். அப்போது, அவர் பேசியதாவது :- கேப்டனின் உடல் அரசு மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்பட்டுள்ளது. அனைத்து ஏற்பாடுகளையும் செய்து கொடுத்த முதலமைச்சர் ஸ்டாலின் மற்றும் அமைச்சர்களுக்கு தேமுதிக சார்பில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். கேப்டனின் இறுதி ஊர்வலம் நடக்க உறுதுணையாக இருந்த போலீசாருக்கு ராயல் சல்யூட். அதேபோல, வழிநெடுகிலும் திரண்டு அஞ்சலி செலுத்திய தொண்டர்கள் மற்றும் ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.
தமிழக அரசியல் வரலாற்றில் யாருக்கும் கிடைக்காத ஒரு மிகப்பெரிய பெயர் கேப்டனுக்கு கிடைத்துள்ளது. கடந்த 2 நாட்களில் மட்டும் 15 லட்சம் பேர் அஞ்சலி செலுத்தியுள்ளதாக நமக்கு கிடைத்த புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. இதற்க காரணம், கேப்டன் செய்த தர்மமும், அவரது எண்ணமும், மக்களுக்கு உதவும் குணமும் தான்.
விஜயகாந்தின் மறைவு செய்தி அறிந்த வடிவேலு ஒரு இரங்கல் கூட தெரிவிக்கவில்லை என்றும், நேரில் வந்து அஞ்சலி செலுத்தாது ஏன் என்கிற கேள்விகளும் ஒரு பக்கம் எழுந்து வருகிறது. வடிவேலுவுடன் பணியாற்றின் நடிகர்களின் இரங்கலுக்கு போகாததால் அவர் மீது பட விமர்சனங்களும் எழுந்து வருகிறது. மீசை ராஜேந்திரனின் பழைய பேட்டி ஒன்று தற்போது வைரலாகி வருகிறது.
அதில், அவர் தனுஷின் படிக்காதவன் படத்தில் விவேக் நடிப்பதற்கு முன்பு வடிவேலு தான் நடித்திருந்தார். அந்த சமயத்தில், ஷூட்டிங் சென்று இருந்தேன். வடிவேலு என்னை பார்த்து விஜயகாந்த் ஆள் தானே நீ உனக்கெல்லாம் சான்சே தரமாட்டேன் போ என விரட்டி அடித்தார் என்று மீசை ராஜேந்திரன் தெரிவித்திருந்தார்.
சூர்யாவின் ரெட்ரோ கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள “ரெட்ரோ” திரைப்படம் வருகிற மே 1 ஆம் தேதி வெளியாகவுள்ளது.…
சாம்சங் தொழிற்சங்கம் அமைக்கப்பட வேண்டும் என சாம்சங் ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த விவகாரத்தில் தமிழக அரசு தலையிட்டு தொழிற்சங்கம்…
ஆளுநருக்கு திடீர் நெஞ்சுவலி ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உடனே மருத்துவமனைக்கு நேரில் சென்றுள்ளார் முதலமைச்சர். மேற்கு வங்கத்தில்வக்பு சட்டங்களுக்கு…
எப்போதும் மாணவன்தான்… கமல்ஹாசனை பொறுத்தவரை எப்போதும் எதையாவது புதிதாக கற்றுக்கொண்டே இருக்கவேண்டும் என நினைத்துக்கொண்டே இருப்பவர். நினைப்பது மட்டுமல்லாது அதனை…
தெலுங்கானா மாநிலம் நிஜமாபாத்தில் ரயித்து பரோசா என்ற பெயரில் விவசாயிகளுக்கு ஆதரவு கொடுக்கும் மாநில அரசின் செயல்பாடுகளை விளக்கி கூறும்…
பழனியில் தமிழக முன்னாள் காங்கிரஸ் கமிட்டி மாநில தலைவர் கே எஸ் அழகிரி செய்தியாளர்களை சந்தித்தார், அப்போது அவர் கூறியதாவது:-…
This website uses cookies.