சொந்தம் கொண்டாடிய வடிவேல்..புகார் அளித்த கிராம மக்கள்..பதட்டத்தில் பரமக்குடி கிராமம்.!
Author: Selvan9 February 2025, 4:08 pm
குல தெய்வ கோவிலை சொந்தம் கொண்டாடும் வடிவேலு
நடிகர் வடிவேலு ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் உள்ள அய்யனார் கோவிலை பறிக்க முயலுவதாக கிராம மக்கள் அவர் மீது புகார் அளித்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளனர்.
இதையும் படியுங்க: போர்ச்சுகளில் அஜித் காருக்கு ஆபத்தா… வெளிவந்த வீடியோவால் ரசிகர்கள் ஷாக்.!
தமிழ் சினிமாவில் பிரபலம் ஆன காமெடி நடிகர்களின் தனக்கென்று தனி ரசிகர் பட்டாளத்தை உருவாக்கி வைத்துள்ள வடிவேல் தன்னுடைய கரியரில் பல வித பிரச்சனைகளை சந்தித்துள்ளார்,அவர் கூட நடித்த பல துணை நடிகர்களும் அவர் மீது பகிரங்கமாக பல குற்றசாட்டுகளை இன்றும் முன் வைத்து வருகின்றனர்.
சில வருடங்களாக பட வாய்ப்புகள் வராமல் தவித்த வடிவேல்,சினிமாவில் ரீ-என்ட்ரி கொடுத்து தற்போது பல படங்களில் நடித்து வருகிறார்.இவர் பொதுவாகவே அதிக கடவுள் பக்தி கொண்டவர்,இந்த நிலையில் அவருடைய குலதெய்வ அய்யனார் கோவில் ராமநாதபுரம் மாவட்டத்தின் பரமக்குடியில் உள்ள காட்டு பரமக்குடியில் அமைந்துள்ளது.
இந்த திருவேட்டை உடைய அய்யனார் கோவிலில் நடிகர் வடிவேல் தனது நெருங்கிய ஆதரவாளர் ஒருவரை அறங்காவலராக நியமிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது,இதனால் கோவில் முன்பு அங்குள்ள கிராம மக்கள் திரண்டனர்,அப்போது செய்தியாளர்களை சந்தித்த அவர்கள்,நடிகர் வடிவேல் எங்களிடம் எந்த ஒரு கலந்துரையாடல் பண்ணாமல்,அவருக்கு நெருங்கிய ஒரு நபரிடம் கோவிலை ஒப்படைக்க முயற்சி செய்கிறார்,இந்த செயலை நாங்கள் ஒரு போதும் ஏற்க மாட்டோம்,நடிகர் வடிவேலின் இந்த செயலை வன்மையாக கண்டிக்கிறோம் என கூறியுள்ளார்கள்.
மேலும்,எல்லோருக்கும் பொதுவான குலதெய்வ கோவிலை அபகரிக்க முயற்சியில் ஈடுபடுவதாக வடிவேல் மீது புகார் அளிக்க உள்ளோம் என அங்குள்ள கிராம மக்கள் பேட்டி அளித்துள்ளனர்.