நடிகர் வடிவேலுவின் தம்பி திடீர் மரணம் – சோகத்தில் மூழ்கிய குடும்பத்திற்கு திரையுலகினர்ஆறுதல்!

Author: Shree
28 August 2023, 3:39 pm

தமிழ் சினிமாவில் கவுண்டமணி – செந்தில்க்கு அடுத்தபடியாக காமெடி நடிகராக மிக பிரபலமாக திகழ்ந்து வந்தவர் நடிகர் வடிவேலு. ரஜினி, கமல், விஜயகாந்த், விஜய், விக்ரம் என முன்னணி நடிகர்கள் படத்தில் நடித்து தனக்கென தனி ரசிகர் பட்டாளத்தை பெற்றவர்.

சில வருடங்களுக்கு முன், எதிர்பாராத விதமாக, 24 ஆம் புலிகேசி படத்தில் ஏற்பட்ட பிரச்சனையால், சினிமாவில் நடிக்க தடை விதித்து இவருக்கு ரெட் கார்ட் கொடுக்கப்பட்டது. சில நிகழ்ச்சிகளில் பங்கேற்ற வடிவேலு, தான் சினிமாவில் நடிக்காமல் இருப்பது பெரும் வலியையும் வேதனையையும் கொடுப்பதாக கூறி கலங்கி வந்தார். பின்னர், தடையை நீக்கியதற்கு பின், மீண்டும் ரீஎண்ட்ரி கொடுத்து, படங்களில் கமிட்டாகி நடித்து வருகிறார். சமீபத்தில் மாமன்னன் படத்தில் நடித்திருந்தார்.

இந்நிலையில் வடிவேலுவின் வீட்டின் ஒரு சோகமான சம்பவம் நடந்துள்ளது. ஆம், வடிவேலுவின் தம்பி ஜெகதீஸ்வரன் கல்லீரல் பாதிப்பால் சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்துள்ளார். 55 வயதாகும் ஜெகதீஸ்வரன் காதல் அழிவதில்லை, மலைக்கோவில் தீபம் உள்ளிட்ட சில படங்களில் நடித்துள்ளார்.

தொடர்ந்து நடிப்பில் கவனம் செலுத்தாத அவர் மதுரையில் ஜவுளி வியாபாரம் செய்து வந்துள்ளார். அவரின் திடீர் மரணத்தால் குடும்பமே உருக்குலைந்து போய்கிடக்கிறது. தம்பியை இழந்து வாடும் நடிகர் வடிவேலுவுக்கு திரையுலகத்தை சேர்ந்த பலர் தங்களது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து வருகிறார்கள்.

  • Vidamuyarchi total earnings worldwide போராடும் ‘விடாமுயற்சி’…இறுதி கட்டத்தை நோக்கி படத்தின் வசூல்.!
  • Close menu