தமிழ் சினிமாவில் கவுண்டமணி – செந்தில்க்கு அடுத்தபடியாக காமெடி நடிகராக மிக பிரபலமாக திகழ்ந்து வந்தவர் நடிகர் வடிவேலு. ரஜினி, கமல், விஜயகாந்த், விஜய், விக்ரம் என முன்னணி நடிகர்கள் படத்தில் நடித்து தனக்கென தனி ரசிகர் பட்டாளத்தை பெற்றவர். சில வருடங்களுக்கு முன், எதிர்பாராத விதமாக, 24 ஆம் புலிகேசி படத்தில் ஏற்பட்ட பிரச்சனையால், சினிமாவில் நடிக்க தடை விதித்து இவருக்கு ரெட் கார்ட் கொடுக்கப்பட்டது.
சில நிகழ்ச்சிகளில் பங்கேற்ற வடிவேலு, தான் சினிமாவில் நடிக்காமல் இருப்பது பெரும் வலியையும் வேதனையையும் கொடுப்பதாக கூறி கலங்கி வந்தார். பின்னர், தடையை நீக்கியதற்கு பின், மீண்டும் ரீஎண்ட்ரி கொடுத்து, படங்களில் கமிட்டாகி நடித்து வருகிறார். சமீபத்தில், இவர் கதாநாயகனாக நடித்து வெளியான நாய் சேகர் ரிட்டர்ன்ஸ் படம் வெளியாகி சுமாரான விமர்சனத்தை பெற்றது. சந்திரமுகி 2, மாமன்னன் போன்ற திரைப்படங்களில் நடித்து வருகிறார்.
இந்நிலையில், வடிவேலுவை நடிக்க வைப்பதே மிகப்பெரிய கஷ்டமாக இருந்து வந்த நேரத்தில் சமீபத்தில் நடித்துக் கொண்டிருக்கும் மாமன்னன் திரைப்படத்தில் ஒட்டுமொத்தமாக சரண்டர் ஆகி எந்த பிரச்சினையும் இல்லாமல் நடித்துக் கொண்டு இருக்கிறார். இதற்கு முக்கிய காரணமாக வடிவேலு மீது இருந்த அனைத்து பஞ்சாயத்துகளையும் தீர்த்து வைத்தது உதயநிதி ஸ்டாலின் தான்.
இனால்தான் அவருடைய மாமன்னன் திரைப்படத்தில் ரொம்பவும் ஈடுபாட்டுடன் வடிவேலு நடித்து வருகிறார். மேலும் இதுதான் தன்னுடைய கடைசி படம் என்று உதயநிதி ஸ்டாலின் சொல்லிவிட்டார். எனவே இந்த படத்தில் ஒழுங்காக நடித்துக் கொடுத்து அவரை கைக்குள் போட்டுக் கொள்ள வேண்டும் என்பதுதான் வடிவேலின் திட்டமாக கூறப்படுகிறது. மேலும் இந்த படத்தில் வடிவேலுவுக்கு வெயிட்டான கதாபாத்திரமும் கொடுக்கப்பட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது.
வக்ஃபு சட்ட திருத்த மசோதா மக்களவை மற்றும் மாநிலங்கலவையில் நிறைவேற்றப்பட்டதை கண்டித்து வேலூர் மேற்கு மாவட்ட தமிழக வெற்றிக் கழகம்…
சச்சின் ரீரிலீஸ்… விஜய் நடிப்பில் 2005 ஆம் ஆண்டு வெளியான “சச்சின்” திரைப்படம் 90ஸ் கிட்ஸின் மிகவும் விருப்பத்திற்குரிய திரைப்படமாக…
2025ஆம் ஆண்டுக்கான ஐபிஎல் தொடரில் சென்னை அணி மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது. குறிப்பாக முதல் போட்டியில் மும்பை அணியுடன்…
அபார முயற்சி, ஆனால்? ரஜினிகாந்தை நாம் திரையில் பல கதாபாத்திரங்களில் ரசித்து பார்த்திருப்போம். ஆனால் அனிமேஷனில் ரஜினிகாந்தை கொண்டு வந்த…
வக்பு வாரிய சட்டத்தருத்த மசோதா கடும் எதிர்ப்புக்கு மத்தியில் மக்களவையில் ஒரு நிறைவேற்றப்பட்டது. இதற்கு தமிழக அரசியல் கட்சிகள் கடும்…
ரொமான்டிக் ஹீரோ டூ ஆக்சன் ஹீரோ சூர்யா தமிழ் சினிமாவில் ஹீரோவாக அறிமுகமானதில் இருந்து காதலை மையமாக வைத்து உருவான…
This website uses cookies.