அவர் சாவுக்கே போகாத வடிவேலு எனக்கு மட்டும் உதவி செய்வாரா? வாய்ப்புக்கேட்டு போனால் வாய்க்கு வந்தபடி திட்டுறார் – புலம்பிய பிரபலம்!
Author: Shree15 June 2023, 5:04 pm
தமிழ் சினிமாவில் யாரும் எட்டக்கூடமுடியாத வகையில் மிகப்பெரிய காமெடி நடிகராக வலம் வந்தவர் வைகைப்புயல் வடிவேலு. தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத நகைச்சுவை நடிகரான இவர் எப்படிபட்ட காமெடியாக இருந்தாலும் தனது பாடி லேங்குவேஜ் மூலம் நிலைநிறுத்திடுவார்.
ஒவ்வொரு தலைமுறைக்கும் ஒவ்வொரு நகைச்சுவை நடிகர்கள் மாறுவது வழக்கம். ஆனால் வடிவேலுவுக்குப் பின் அடுத்தாக இவர் என சொல்ல முடியாத அளவுக்கு அவர் இருந்து வருகிறார். நடிகர் ராஜ்கிரண் தான் வடிவேலுவை தமிழ் சினிமாவில் அறிமுகம் செய்துவைத்தார்.
`என் தங்கை கல்யாணி’ படம் மூலம் சிறிய பாத்திரத்தில் தன் பயணத்தைத் துவங்கிய வடிவேலு தொடர்ந்து என் ராசாவின் மனசிலே, சின்ன கவுண்டர், சிங்கார வேலன், தேவர் மகன், காதலன், காதலர் தேசம் என தொன்னூறுகளின் இறுதியில் கவனிக்கப்படும் முகமாக மாறினார்.
அதன் பின்னர் , ரஜினி ,கமல் , அஜித், விஜய், பிரசாந்த் என பல முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்திருக்கிறார். இதனிடையே சமீப நாட்களாக நடிகர் வடிவேலு குறித்து அடுக்கடுக்கான புகார்கள் வந்த வண்ணம் உள்ளது. பணத்திமிரு, நான் தான் என்ற தலைக்கனம் உள்ளிட்டவை வடிவேலுவின் வாழ்க்கையை இன்னும் அழித்துக்கொண்டு தான் இருக்கிறது. தற்போது அவர் உதயநிதி ஸ்டாலின் உடன் மாமன்னன் படத்தில் நடித்து வருகிறார்.
இந்நிலையில் பிரபல காமெடி நடிகர் பாவா லக்ஷ்மணன் பேட்டி ஒன்றில் வடிவேலு குறித்து அடுக்கடுக்கான புகார்களை கூறியுள்ளார். வடிவேலு மிகவும் மோசமானவர். அவர் யாருக்கும் உதவிகள் செய்யமாட்டார். வாய்ப்பு கேட்டு அவர் வீட்டுக்கு சென்றாலும் வாய்க்கு வந்தபடியெலாம் திட்டி அனுப்பிடுவார். நாய் சேகர் படத்தில் நடிக்க அவரிடம் வாய்ப்பு கேட்டு போனதற்கு எதற்கு வந்தாய்? வெளியே போ? வராதே? என்று தான் முகத்தில் அடித்தது போல் சொன்னார்.
எனக்கு மயிலசாமி அண்ணா தான் நிறைய உதவிகள் செய்துள்ளார். சுகர் மாத்திரை, மருந்துகள் வாங்க கூட அவர் தான் பணம் கொடுப்பார். இனிமே யாரிடம் போய் நான் நிற்பேன் என உருக்கமாக கூறினார். வடிவேலு எந்த உதவியும் செஞ்சதில்லையா? என கேட்டதற்கு, அல்வா வாசு மதுரையில் இறந்தார். அப்போது வடிவேலு மதுரையில் இருந்தும் அவரை போய் பார்க்கவில்லை. அப்படி இரும்போது எனக்கு மட்டும் என செய்திடப்போறார்? நான் சந்திக்கவே கூடாது என்று நினைக்கும் நபர்களில் வடிவேலு ஒருவர். அவர் பெயரை கூட சொல்ல விரும்பவில்லை என கூறினார். தொடர்ந்து பல காமெடி நடிகர்கள் வடிவேலு மீது அடுக்கடுக்கான புகார்கள் கூறி வருவது சர்ச்சை கிளப்பியுள்ளது.