பிரபல கட்சியில் ஐக்கியமான வடிவேலு.. தேர்தலில் போட்டியா? அவரே சொன்ன விளக்கம்..!
Author: Vignesh6 March 2024, 6:24 pm
தமிழ் சினிமாவில் யாரும் எட்டக்கூடமுடியாத வகையில் மிகப்பெரிய காமெடி நடிகராக வலம் வந்தவர் வைகைப்புயல் வடிவேலு. தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத நகைச்சுவை நடிகரான இவர் எப்படிபட்ட காமெடியாக இருந்தாலும் தனது பாடி லேங்குவேஜ் மூலம் நிலைநிறுத்திடுவார்.

ஒவ்வொரு தலைமுறைக்கும் ஒவ்வொரு நகைச்சுவை நடிகர்கள் மாறுவது வழக்கம். ஆனால் வடிவேலுவுக்குப் பின் அடுத்தாக இவர் என சொல்ல முடியாத அளவுக்கு அவர் இருந்து வருகிறார். நடிகர் ராஜ்கிரண் தான் வடிவேலுவை தமிழ் சினிமாவில் அறிமுகம் செய்துவைத்தார்.

“என் தங்கை கல்யாணி’ படம் மூலம் சிறிய பாத்திரத்தில் தன் பயணத்தைத் துவங்கிய வடிவேலு தொடர்ந்து என் ராசாவின் மனசிலே, சின்ன கவுண்டர், சிங்கார வேலன், தேவர் மகன், காதலன், காதலர் தேசம் என தொன்னூறுகளின் இறுதியில் கவனிக்கப்படும் முகமாக மாறினார்.

அதன் பின்னர், ரஜினி, கமல், அஜித், விஜய், பிரசாந்த் என பல முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்திருக்கிறார். இதனிடையே சமீப நாட்களாக நடிகர் வடிவேலு குறித்து அடுக்கடுக்கான கிசுகிசுகளும், சர்ச்சைகளும் வந்த வண்ணம் உள்ளது. அதையும் தாண்டி அவர் தொடர்ந்து பெரிய நடிகர் என்ற அந்தஸ்தில் தான் இருந்து வருகிறார்.
இந்நிலையில், வடிவேலு உதயநிதி ஸ்டாலின் நடித்த மாமன்னன் படத்தில் உடன் நடித்திருந்தார். திமுக சார்பில் போட்டியிடுகிறார் என தகவல் கடந்த சில தினங்களாக பரவி வருகிறது. அந்த செய்தி உண்மை இல்லை என வடிவேலு தற்போது விளக்கம் கொடுத்திருக்கிறார். தன் நடிப்பில் மட்டுமே கவனம் செலுத்தி வருவதாகவும் தெரிவித்துள்ளார்.