5 செட் துணி வாங்கித் தந்த விஜயகாந்தை மறந்த வடிவேலு… காரி துப்பிய Blue சட்டை மாறன்!

Author: Rajesh
28 December 2023, 8:10 pm

தேமுதிக தலைவர் விஜயகாந்த் கடந்த சில வருடங்களாகவே உடல்நலம் குன்றி வீட்டிலேயே முடங்கினார். நேற்று உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் மீண்டும் அனுமதிக்கப்பட்ட விஜயகாந்துக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தேமுதிக தலைமை தெரிவித்தது. மூச்சு விடுவதில் சிரமம் ஏற்பட்டுள்ளதால் வெண்டிலேட்டர் மூலம் செயற்கை சுவாசம் அளிக்கப்பட்டு சிகிச்சை கொடுக்கப்படுவதாக தெரிவித்தது.

இதனிடையே, விஜயகாந்தின் உடல்நிலையில் பின்னடைவு ஏற்பட்டுள்ளதாகவும், 9 மணிக்கு மருத்துவ அறிக்கை வெளியிடப்படும் என தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில், விஜயகாந்த் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக மியாட் மருத்துவமனை நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது :- கேப்டன்‌ விஜயகாந்த்‌ அவர்கள்‌ நுரையீரல்‌ அழற்சி காரணமாக மருத்துவமனையில்‌ அனுமதிக்கப்பட்டு வென்டிலேட்டர்‌ ஆதரவுடன்‌ சிகிச்சை பெற்றிருந்தார்‌. மருத்துவ பணியாளர்களின்‌ கடின முயற்சி இருந்தபோதிலும்‌ அவர்‌ இன்று காலை 28 டிசம்பர்‌ 2023 காலமானார்‌.” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து, ஆம்புலன்ஸ் மூலம் விஜயகாந்த்தின் உடல் சாலிகிராமத்தில் உள்ள அவரது வீட்டுக்கு எடுத்துச் செல்லப்பட்டது. அங்குகட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் அஞ்சலி செலுத்தினர். பிறகு, கோயம்பேட்டில் உள்ள தேமுதிக அலுவலகத்தில் அவரது உடல் ஆம்புலன்ஸ் மூலம் எடுத்துச் செல்லப்பட்டது. சுமார் 3 மணிநேரம் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு, தேமுதிக அலுவலகம் கொண்டு செல்லப்பட்டது. அங்கு திரை பிரபலங்கள், தொண்டர்கள், பொதுமக்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

வழக்கமாக விஜயகாந்த் கட்சி அலுவலகத்திற்கு வந்தால் அவருடைய பாடல்கள் ஒலிக்கும். ஆனால் இன்று ஆம்புலன்ஸில் விஜயகாந்தின் உடல் வந்த போது அழுகுரல்கள் கேட்டன. இதையடுத்து அங்கு விஜயகாந்தின் உடல் வைக்கப்பட்ட போது ஐஸ் பெட்டியை தூக்கி விஜயகாந்தின் தலைக்கு மஞ்சள் நிறத்தில் தலையணை வைக்கப்பட்டது. அப்போது தந்தையின் உடலை கண்டு சண்முக பாண்டியனும் விஜய பிரபாகரனும் கதறி அழுதனர். அவர்கள் இருவரும் தாய் பிரேமலதாவை பார்த்ததும் மேலும் அழத் தொடங்கினர். உடனே பிரேமலதா தனது மகன்களை கட்டி அணைத்தபடியே கதறி அழுதார். அவர்களும் அப்பா அப்பா எழுந்து வாங்கப்பா என அழுதனர்.

விஜயகாந்திற்கு பல நெருங்கிய திரை நண்பர்கள், விஜயகாந்த் உதவியால் பிரபலமாக தென்பட்ட சில நடிகர்கள், அரசியல் வட்டாராம், ரசிகர் பெருமக்கள் என பலர் தங்களது ஆழ்ந்த இரங்கலையும், வருத்தத்தையும் தெரிவித்து வந்தனர். ஆனால் நடிகர் வடிவேலு இதுவரை நேரில் வந்து அஞ்சலி செலுத்தவில்லை. விஜயகாந்திற்கு மட்டும் அல்ல விவேக், மயில்சாமி, மனோபாலா, போண்டாமணி, விஜயகாந்த் இப்படி எந்த ஒரு சக நடிகரின் இறுதி சடங்கிலும் அவர் பங்கேற்கவில்லை.

இது குறித்து விமர்சித்துள்ள புளு சட்டை மாறன் தனது ட்விட்டர் பக்கத்தில், எத்தனையோ தடவ வடிவேலு தன்னை பொது மேடைகள் ல இழிவு படுத்திருந்தாலும்.. கடைசி வரைக்கும் அவர் வடிவேலுவ தப்பா பேசுன மாதிரி ஒரு video கூட நீங்க பார்த்திருக்க முடியாது அதான் கேப்டன்.

சின்னக்கவுண்டர் படத்தில் நடிக்கும்போது நல்ல துணி இல்லாமல் இருந்த வடிவேலுவுக்கு ஐந்து செட் துணிகளை வாங்கித்தந்தார் கேப்டன்”. ஆனால் அதை கூட மறந்துவிட்டார்.அவ்வளவு ஏன் தனது நெருங்கிய நண்பர்கள், உடன் நடித்தவர்கள், ஆரம்பகாலத்தில் உதவி செய்தவர்கள் என எவரது இறப்பிற்கும் செல்லாதவர் வடிவேலு. உதாரணம்: விவேக், மயில்சாமி, மனோபாலா, போண்டாமணி, விஜயகாந்த் மற்றும் பலர்.

vadivelu

தனக்குத்தெரிந்த திரையுலகத்தினர் சென்னையில் இறந்த தகவல் வந்தால் உடனே… மதுரைக்கு விமான டிக்கட் போட்டு ஓடிவிடுவதும், வேறு ஊர்களில் நடிகர்கள் இறந்தால்.. சென்னைக்கு வந்துவிடுவதும் இவரது யுக்தியாம். பல்வேறு படங்களில் உடன் பணியாற்றிய அல்வா வாசு மதுரைக்காரராம். இவரது வீட்டிற்கு அருகேதான் அவரது வீடாம். அவர் இறந்த தகவல் வந்ததும். உடனே சென்னைக்கு வந்து விட்டாராம். என்று வடிவேலுவின் மோசமான முகத்தை கிழித்து தொங்கவிட்டுவிட்டார் ப்ளூ சட்டை மாறன்.

  • Vidamuyarchi shooting completed அஜித்தே..இனி நம்ம ஆட்டம் தான்..விடாமுயற்சி படப்பிடிப்பு ஓவர்…இயக்குனர் வெளியிட்ட பதிவு..!
  • Views: - 836

    0

    0