கடைசி வரை உதவி பண்ணல…. நோயால் துடிதுடித்து மரணித்த தம்பி – மனம் இறங்காத வடிவேலு!
Author: Shree31 August 2023, 5:21 pm
தமிழ் சினிமாவில் கவுண்டமணி – செந்தில்க்கு அடுத்தபடியாக காமெடி நடிகராக மிக பிரபலமாக திகழ்ந்து வந்தவர் நடிகர் வடிவேலு. ரஜினி, கமல், விஜயகாந்த், விஜய், விக்ரம் என முன்னணி நடிகர்கள் படத்தில் நடித்து தனக்கென தனி ரசிகர் பட்டாளத்தை பெற்றவர்.
சில வருடங்களுக்கு முன், எதிர்பாராத விதமாக, 24 ஆம் புலிகேசி படத்தில் ஏற்பட்ட பிரச்சனையால், சினிமாவில் நடிக்க தடை விதித்து இவருக்கு ரெட் கார்ட் கொடுக்கப்பட்டது. சில நிகழ்ச்சிகளில் பங்கேற்ற வடிவேலு, தான் சினிமாவில் நடிக்காமல் இருப்பது பெரும் வலியையும் வேதனையையும் கொடுப்பதாக கூறி கலங்கி வந்தார். பின்னர், தடையை நீக்கியதற்கு பின், மீண்டும் ரீஎண்ட்ரி கொடுத்து, படங்களில் கமிட்டாகி நடித்து வருகிறார். சமீபத்தில் மாமன்னன் படத்தில் நடித்திருந்தார்.
இதனிடையே அண்மையில் வடிவேலுவின் தம்பி ஜெகதீஸ்வரன் கல்லீரல் பாதிப்பால் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். 55 வயதான ஜெகதீஸ்வரன் காதல் அழிவதில்லை, மலைக்கோவில் தீபம் உள்ளிட்ட சில படங்களில் நடித்துள்ளார். தொடர்ந்து நடிப்பில் கவனம் செலுத்தாத அவர் மதுரையில் ஜவுளி வியாபாரம் செய்து வந்துள்ளார். பின்னர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துவிட்டார்.
இந்நிலையில் ஜெகதீஸ்வரன் மரணம் குறித்து பேசிய பிரபல பத்திரிக்கையாளர் பயில்வான் ரங்கநாதன், கூட பிறந்த தம்பி நோய்வாய்ப்பட்டு துடிதுடித்து இறந்துள்ளார். கடைசி நேரத்தில் கூட அவருக்கு உதவி செய்ய முன்வரவில்லை வடிவேலு. வடிவேலு நினைத்திருந்தால் அவரின் தம்பிக்கு நிறைய படவாய்ப்புகள் கொடுத்திருக்கலாம். ஆனால் செய்யவில்லை. அவரால் உதவி செய்ய முடியவில்லை என்றால் கூட முதலமைச்சர் முக ஸ்டாலின், உதயநிதியிடம் கேட்டிருந்தால் கூட அவர்கள் சிகிச்சைக்கு ஏதேனும் செய்திருப்பார்கள். ஆனால் அப்படி ஏதும் செய்யக்கூட வடிவேலுக்கு மனம் வரவில்லை என பயில்வான் கூறினார்.