எனக்கு நீ போட்டியா…? அப்போவே வடிவேலுவை குமுறி கூர் கட்டிய விஜயகாந்த்!

Author: Shree
11 March 2023, 6:28 pm

தமிழ் சினிமாவில் ஒரு காலத்தில் முன்னணி காமெடியன் என்ற இடத்தை தக்க வைத்திருந்தவர் நடிகர் வடிவேலு. அடுத்தடுத்த படம், உச்ச நடிகர்களுடன் வாய்ப்பு , மளமளவென உயர்ந்த சம்பளம் இது எல்லாம் தலைக்கணமாகிவிட்டது.

அதன் பின்னர் படப்பிடிப்புக்கு சரியான நேரத்திற்கு போகாமல் டகால் அடிப்பது, பணத்தை வாங்கிவிட்டு ஒரு பேச்சு பேசுவது, தன்னைவிட்டால் வேறு யாரும் இல்லை என திமிர் காட்டுவது என இருந்து வந்தார்.

அப்படிதான் விஜயகாந்துக்கு சின்ன கவுண்டர் படத்தில் குடை பிடித்துவிட்டு ரூ. 250 சம்பளத்துக்கு வேலை பார்த்த வடிவேலுக்கு அவர் வீட்டுக்கு எதிரிலே போட்டியாக வீட்டு வாங்கினாராம்.

பின்னர் அங்கு ஒரு இறப்பு நேரிட, அஞ்சலி செலுத்தவந்த உறவினர்களை என் வீட்டு எதிரில் எதுக்கு வண்டி நிறுத்துற எடு எடு என அராஜகம் செய்து விஜயகாந்த் ஆளிடம் தர்ம அடி வாங்கினாராம். இதனை தனியார் தொலைக்காட்சிக்கு பேட்டி கொடுத்த நடிகர் தியாகு கூறியுள்ளார். இதோ அந்த வீடியோ:

  • Annamalai Warning About VijayTrisha Controversy விஜயுடன் திரிஷா சென்றால் தப்பா? சும்மா விட மாட்டேன் : பகிரங்க எச்சரிக்கை!
  • Views: - 908

    12

    17