‘கேங்கர்ஸ்’ திரைப்படத்தில் வடிவேலின் அசத்தல் கெட்டப்..சுந்தர் சி போட்ட தரமான ஸ்கெட்ச்.!

Author: Selvan
14 February 2025, 9:54 pm

பல கெட்டப்புகளில் அசத்தும் வடிவேல்

சமீப நாட்களாக தமிழ் சினிமாவில் ட்ரெண்டிங்கில் இருப்பவர் இயக்குனர் சுந்தர் சி,இவர் அரண்மனை 4 என்ற மாஸ் ஹிட் படத்தை கொடுத்து அசத்தினார்.அதன் பிறகு கடந்த பொங்கல் அன்று இவருடைய இயக்கத்தில் விஷால் மற்றும் பல நட்சத்திரங்கள் நடித்த மதகதராஜா திரைப்படம்,12 வருடங்களுக்கு பிறகு ரிலீஸ் ஆகி தமிழ் சினிமாவை கதிகலங்க வைத்தது.

இதையும் படியுங்க: சினேகன்-கன்னிகா ஜோடி இரட்டை குழந்தைகளின் பெயரை கவனித்தீர்களா..அட செம கியூட்.!

இதனால் படு குஷியில் இருக்கும் சுந்தர் சி,அடுத்தடுத்து பல படங்களை இயக்க திட்டமிட்டுள்ளார்.அந்த வகையில் கலகலப்பு 3-யை இயக்குகிறார்,அடுத்ததாக நயன்தாராவை வைத்து மூக்குத்தி அம்மன்-2 படத்தை விரைவில் தொடங்க உள்ளார்,அதுமட்டுமில்லாமல் விஷாலை வைத்து இன்னொரு படத்தை இயக்கவும் திட்டமிட்டு வருகிறார்.

இப்படி பிஸியாக வலம் வரும் சுந்தர் சி,கடந்த வருடம் வடிவேலை வைத்து கேங்கர்ஸ் படத்தை எடுக்க போவதாக அறிவித்தார்.கிட்டத்தட்ட 15 வருடங்களுக்கு பிறகு வடிவேல் சுந்தர் சி கூட்டணி இணைந்துள்ளதால்,ரசிகர்கள் பெரும் எதிர்பார்ப்பில் உள்ளனர்.

சுந்தர் சி படம் என்றாலே காமெடிக்கு பஞ்சம் இருக்காது,அதுவும் படத்தில் வடிவேல் இருப்பதால் பக்கா என்டர்டைன்மெண்ட் படமாக இப்படம் உருவாகி வருகிறது.தற்போது இப்படத்தில் இருந்து ஒரு முக்கிய தகவல் கசிந்துள்ளது.

அதாவது இந்த படத்தில் வடிவேல் 5 கதாபாத்திரங்களில் நடித்துள்ளதாகவும்,அதிலும் முக்கியமாக லேடி கெட்டப்பில் நடித்திருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

இதனால் கேங்கர்ஸ் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெரும் என எதிர்பார்க்கப்படுகிறது.மேலும் இப்படம் வடிவேலுக்கு தரமான கம் பேக் படமாக அமையும் என சினிமா வட்டாரங்கள் மத்தியில் பேசப்படுகிறது.

  • என் வாழ்க்கைக்கு உயிர் கொடுத்தவர் சிம்பு…பிரபல காமெடி நடிகர் உருக்கம்.!
  • Leave a Reply