அவன படத்துல இருந்து தூக்குங்க… படப்பிடிப்பில் காண்டான கவுண்டமனி.!
Author: Selvan17 February 2025, 4:16 pm
ஆணவத்தில் வடிவேலு,கோவத்தில் கவுண்டமணி
தமிழ் சினிமாவில் முன்னணி காமெடி நடிகர்களாக ஜொலித்தவர்கள் கவுண்டமணி செந்தில்,இவர்களுடைய காம்போவிற்கு இன்றும் ரசிகர் பட்டாளம் உள்ளது.இவர்கள் தமிழ் சினிமாவில் உச்சத்தில் இருந்த போது தான் நடிகர் வடிவேல் தன்னுடைய பயணத்தை தொடங்குகிறார்.
இதையும் படியுங்க: தாறுமாறான வசூல் வேட்டையில் ‘குடும்பஸ்தன்’…வெற்றிப்பாதையில் படக்குழு.!
அந்த சமயத்தில் தமிழ் சினிமாவில் சிறு பட்ஜெட்டில் குடும்பங்கள் கொண்டாடும் வெற்றிப்படங்களை கொடுத்தவர் இயக்குனர் V.சேகர்,இவர் இயக்கிய நான் பெத்த மகனே திரைப்படத்தின் போது நடந்த பல சுவாரஸ்ய தகவல்களை யூடியூப் சேனல் ஒன்றில் பகிர்ந்துள்ளார்.

அதில் ‘நான் பெத்த மகனே’ திரைப்படத்தின் போது ஷூட்டிங் நடைபெறும் இடத்திற்கு தன்னுடைய புது காரில் வந்த வடிவேல்,கவுண்டமணி மற்றும் செந்தில் கார்களை இடிப்பது போல் சென்று நிறுத்தியுள்ளார்,அதுமட்டுமில்லாமல் கவுண்டமணி கண் முன்னே இயக்குனர் V.சேகரை காரில் வைத்து ரவுண்ட் அடித்துள்ளார்.
இதனை பார்த்த கவுண்டமணி,இயக்குனரிடம் சென்று அங்கே பாருங்க,இப்போ வந்த பையன் அவன்,என் கார இடிக்குற மாதிரி போறான்,இவன உடனே படத்தில இருந்து தூக்குங்க என்று கூறியுள்ளார்,அதற்கு இயக்குனர் V.சேகர் அட்வான்ஸ் கொடுத்துவிட்டேன்,கொஞ்சோ பொறுத்துக்கோங்க என்று கூறியுள்ளார்.
வடிவேலின் அடாவடி செயலால்,கவுண்டமணி மற்றும் செந்தில் அடுத்ததாக V.சேகர் இயக்கிய ‘காலம் மாறி போச்சு’ திரைப்படத்தில் வடிவேலுடன் நடிக்க மாட்டேன் என்று விலகியுள்ளனர்.அதன் பிறகு வடிவேலுடன் சேர்ந்து நடிப்பதை தவிர்த்து வந்ததாக தெரிவித்திருப்பார்.மேலும் தன்னுடைய படங்களில் முன்னணி நடிகைகளை வைத்து எப்படி ஹிட் கொடுத்தேன் என்ற ரகசியத்தையும் இயக்குனர் V.சேகர் அந்த பேட்டியில் கூறியிருப்பார்.