“உங்க வயசென்ன.. அவங்க சைசென்ன”.. 19-வயது நடிகையை கட்டி அணைத்த பிரபல நடிகர்.. கலாய்த்து தள்ளும் நெட்டிசன்கள்..!
Author: Vignesh4 March 2023, 5:45 pm
தமிழ் சினிமாவில் கவுண்டமணி – செந்தில்க்கு அடுத்தபடியாக காமெடி நடிகராக மிக பிரபலமாக திகழ்ந்து வந்தவர் நடிகர் வடிவேலு. ரஜினி, கமல், விஜயகாந்த், விஜய், விக்ரம் என முன்னணி நடிகர்கள் படத்தில் நடித்து தனக்கென தனி ரசிகர் பட்டாளத்தை பெற்றவர். சில வருடங்களுக்கு முன், எதிர்பாராத விதமாக, சில காரணங்களுக்காக, சினிமாவில் நடிக்க தடை விதித்து இவருக்கு ரெட் கார்ட் கொடுக்கப்பட்டது.
பின்னர், தடையை நீக்கியதற்கு பின், 4 வருடங்களுக்கு பிறகு, மீண்டும் ரீஎண்ட்ரி கொடுத்து, படங்களில் கமிட்டாகி நடித்து வருகிறார். சமீபத்தில், இவர் கதாநாயகனாக நடித்து வெளியான நாய் சேகர் ரிட்டர்ன்ஸ் படம் வெளியாகி சுமாரான விமர்சனத்தை பெற்றது. சந்திரமுகி 2, மாமன்னன் போன்ற திரைப்படங்களில் நடித்து வருகிறார்.
இந்நிலையில், வடிவேலு எவ்வளவு தான் காமெடி ஜாம்பவானாக இருந்து காமெடியில் கலக்கினாலும் சில சர்ச்சைகளிலும் சிக்கி வந்துள்ளார். அந்த வகையில், காமெடி நடிகர் வடிவேலு பொது நிகழ்ச்சி ஒன்றில் 19 வயது நடிகையை கட்டிப்பிடித்த படி போஸ் கொடுத்த புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது. அதாவது விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் மௌன ராகம் சீரியலில் சக்தியாக நடிக்கும் ரவீணா வடிவேலுவை சந்தித்த போது இருவரும் கிளோசாக எடுத்துக்கொண்ட புகைப்படம் இணையத்தில் தீயாய் உலா வருகிறது.
இதனை பார்த்த நெட்டிசன்கள் இதெல்லாம் ஒரு பெரிய மனுஷன் பண்ற வேலையா என கமெண்ட் செய்து வருகின்றனர்.