தமிழ் சினிமாவில் யாரும் எட்டக்கூடமுடியாத வகையில் மிகப்பெரிய காமெடி நடிகராக வலம் வந்தவர் வைகைப்புயல் வடிவேலு. தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத நகைச்சுவை நடிகரான இவர் எப்படிபட்ட காமெடியாக இருந்தாலும் தனது பாடி லேங்குவேஜ் மூலம் நிலைநிறுத்திடுவார்.
ஒவ்வொரு தலைமுறைக்கும் ஒவ்வொரு நகைச்சுவை நடிகர்கள் மாறுவது வழக்கம். ஆனால் வடிவேலுவுக்குப் பின் அடுத்தாக இவர் என சொல்ல முடியாத அளவுக்கு அவர் இருந்து வருகிறார். நடிகர் ராஜ்கிரண் தான் வடிவேலுவை தமிழ் சினிமாவில் அறிமுகம் செய்துவைத்தார். `என் தங்கை கல்யாணி’ படம் மூலம் சிறிய பாத்திரத்தில் தன் பயணத்தைத் துவங்கிய வடிவேலு தொடர்ந்து என் ராசாவின் மனசிலே, சின்ன கவுண்டர், சிங்கார வேலன், தேவர் மகன், காதலன், காதலர் தேசம் என தொன்னூறுகளின் இறுதியில் கவனிக்கப்படும் முகமாக மாறினார்.
அதன் பின்னர் , ரஜினி ,கமல் , அஜித், விஜய், பிரசாந்த் என பல முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்திருக்கிறார். இதனிடையே சமீப நாட்களாக நடிகர் வடிவேலு குறித்து அடுக்கடுக்கான புகார்கள் வந்த வண்ணம் உள்ளது. பணத்திமிரு, நான் தான் என்ற தலைக்கனம் உள்ளிட்டவை வடிவேலுவின் வாழ்க்கையை இன்னும் அழித்துக்கொண்டு தான் இருக்கிறது.
இந்நிலையில், சமீபத்தில் விஜயகாந்த் மரணம் அடைந்த போது கூட இறுதி அஞ்சலி செலுத்த வடிவேலு வரவில்லை என்று பல்வேறு விமர்சனங்களும் முன்வைக்கப்பட்டது. முன்னதாக வடிவேலுவின் வளர்ச்சிக்கு விஜயகாந்த் முக்கியமான காரணமாக இருக்கிறாரோ அதேபோல் தான் ராஜ்கிரனும் ஒரு முக்கியமான காரணம் என்று கூட பாராமல் அவரை சமீபத்தில் அவமதிக்கும் வகையில் வடிவேலு நடந்து கொண்டுள்ளார்.
அண்மையில், நடைபெற்ற கலைஞர் 100 நிகழ்ச்சி விழாவில் திரையுலகை சேர்ந்த பல நட்சத்திரங்கள் கலந்து கொண்டனர். விழா மேடைக்கு வரும் கார்கள் கார் பார்க்கிங்கில் இருந்து இரண்டு கிலோமீட்டர் தொலைவு என்பதால், அங்கிருந்து பேட்டரி கார் மூலம் முக்கிய திரை பிரபலங்கள் அழைத்து செல்லப்பட்டனர். ஆளுக்கு ஒரு பேட்டரி கார் அனுப்பப்படும் என நினைத்தார்கள் ஆனால், அந்த பேட்டரி காரில் ஆறு முதல் ஏழு பேர் வரை பயணம் செய்தார்கள். இதனால், ராஜ்கிரன் வந்த பேட்டரி காரில் ராஜ்கிரனுக்கு அருகே அமரும் சூழல் வடிவேலுக்கு ஏற்பட்டுள்ளது. இதனால், அந்த இடத்தில் வடிவேலு கடுப்பாகிவிட்டாராம். உடனடியாக, அந்த பேட்டரி காரை நிறுத்த சொல்லிவிட்டு காரில் இருந்து வடிவேலு இறங்கி விட்டாராம். அங்கிருந்து ராஜ்கிரனை வடிவேலு ஏறெடுத்து கூட பார்க்கவில்லை என கூறப்படுகிறது.
தேர்தலை நோக்கி விஜய் 2026 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலை விஜய் சந்திக்கவுள்ள நிலையில் அதற்கான ஆயத்தங்களை மிகத் தீவிரமாக…
மதுரை முனிச்சாலை தினமணி தியேட்டர் சந்திப்பில் மதிமுக முதன்மை செயலாளரும், திருச்சி நாடாளுமன்ற உறுப்பினருமான துரை வைகோ தலைமையில் கண்டன…
இயக்குநர் பாலா உருவாக்கும் படங்கள் தனித்தரம் வாய்ந்தவை. தமிழ் சினிமாவில் தனக்கென பாணியில் உருவாக்கி சாதனை படைத்தவர். நடிக்கத் தெரியாதவர்களை…
சுந்தர் சி-நயன்தாரா கூட்டணி 2020 ஆம் ஆண்டு நயன்தாரா அம்மனாக நடித்து வெளிவந்த “மூக்குத்தி அம்மன்” திரைப்படம் ரசிகர்களிடையே மிகப்பெரிய…
திருவள்ளூர் வடக்கு மாவட்ட அதிமுக சார்பில் பழவேற்காடு தாங்கள் பெரும்புலம் அவுரிவாக்கம் உள்ளிட்ட ஊராட்சிகளுக்கு பூத் கமிட்டி ஆலோசனைக் கூட்டம்…
கமல்ஹாசன்-சிம்பு-மணிரத்னம் மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன், சிம்பு ஆகியோரின் நடிப்பில் உருவாகியுள்ள “தக் லைஃப்” திரைப்படம் வருகிற ஜூன் மாதம் 5…
This website uses cookies.