ரெட்ரோ படத்தில் வடிவேலு? சீக்ரெட்டை போட்டுடைத்த இயக்குனர்? ஆனா அங்கதான் ஒரு டிவிஸ்ட்!
Author: Prasad22 April 2025, 5:41 pm
புதுமையான ஆக்சன் படம்
கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள “ரெட்ரோ” திரைப்படம் வருகிற மே மாதம் 1 ஆம் தேதி வெளிவரவுள்ளது. இதில் சூர்யாவுக்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடித்துள்ளார். மேலும் இவர்களுடன் ஜோஜு ஜார்ஜ், நாசர், பிரகாஷ் ராஜ், ஜெயராம் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர்.
சூர்யாவும் ஜோதிகாவும் இணைந்து இத்திரைப்படத்தை தயாரித்துள்ளனர். இத்திரைப்படத்தின் அட்டகாசமான டிரைலர் சமீபத்தில் வெளியானது. பிரபல இயக்குனரான அல்போன்ஸ் புத்திரன் இந்த டிரைலரை படத்தொகுப்பு செய்திருந்தார். மிகவும் வித்தியாசமான முறையில் இத்திரைப்படத்தின் டிரைலர் கட் செய்யப்பட்டிருந்தது.

“ரெட்ரோ” திரைப்படம் முழுக்க முழுக்க ஒரு ஆக்சன் திரைப்படமாக உருவாகியுள்ளதாக டிரைலரை பார்க்கும்போது தெரிய வருகிறது. தமிழ் சினிமாவில் ஒரு வித்தியாசமான கதைக்களத்தை உடைய திரைப்படமாகவும் இது அமையும் எனவும் கூறப்படுகிறது. இந்த நிலையில் இத்திரைப்படத்தை குறித்த ஒரு சுவாரஸ்ய தகவலை சமீபத்திய பேட்டி ஒன்றில் கூறியுள்ளார் இத்திரைப்படத்தின் இயக்குனரான கார்த்திக் சுப்பராஜ்.
ரெட்ரோ படத்தில் வடிவேலு
அதாவது இத்திரைப்படத்தில் ஜெயராம் கதாபாத்திரத்திற்கு முதலில் வடிவேலுவை நடிக்க வைக்க மனதில் நினைத்து வைத்திருந்தாராம். ஆனால் உதவி இயக்குனர்களிடம் டிஸ்கஸ் செய்தபோது ஒரு உதவி இயக்குனர் ஜெயராமின் பெயரைச் சொல்ல, கார்த்திக் சுப்பராஜ் உற்சாகமாகிவிட்டாராம். அந்த கதாபாத்திரத்திற்கு ஜெயராம் மிகவும் பொறுத்தமாக இருப்பதாக அவருக்கு தோன்றியதாக அப்பேட்டியில் கார்த்திக் சுப்பராஜ் கூறியுள்ளார்.

“ரெட்ரோ” படத்தின் டிரைலரை பார்க்கும்போது ஜெயராம் ஒரு வில்லன் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் என தெரிய வருகிறது.
