கற்றது தமிழ், தங்க மீன்கள் போன்ற படங்களை இயக்கிய இயக்குனர் ராமிடம் உதவி இயக்குனராக பணியாற்றியவர் தான் மாரி செல்வராஜ். இவர் கடந்த 2018-ம் ஆண்டு வெளியான பரியேறும் பெருமாள் படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார். தனது முதல் படத்திலேயே முத்திரை பதித்த மாரி செல்வராஜ், இரண்டாவதாக தனுஷை வைத்து கர்ணன் என்கிற மாபெரும் ஹிட் படத்தைக் கொடுத்து தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனராக உயர்ந்தார். கலைப்புலி எஸ். தாணு தயாரித்திருந்த இப்படம் பல்வேறு விருதுகளையும் வென்று வருவதோடு, பிற மொழிகளிலும் ரீமேக் செய்யப்பட்டு வருகிறது.
இதைத் தொடர்ந்து நடிகர் விக்ரமின் மகன் துருவ் விக்ரம் நடிக்கும் படத்தை இயக்க ஒப்பந்தம் ஆனார் மாரி செல்வராஜ். இப்படத்தை பா.இரஞ்சித்தின் சொந்த தயாரிப்பு நிறுவனமான நீலம் புரொடக்ஷன்ஸ் தயாரிக்கிறது. இப்படத்தில் நடிகர் துருவ் விக்ரம் கபடி வீரராக நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது. இப்படத்தின் ஷூட்டிங்விரைவில் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதனிடையே, உதயநிதி ஸ்டாலின் ஹீரோவாக நடிக்கும் ‘மாமன்னன்’ படத்தையும் இயக்க ஒப்பந்தமானார் மாரி செல்வராஜ். இப்படத்தில் கீர்த்தி சுரேஷ், மலையாள நடிகர் பகத் பாசில் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். மேலும், நகைச்சுவை நடிகர் வடிவேலு காமெடியனாக நடிக்கின்றார்.
இந்நிலையில், மாமன்னன் படத்தின் படப்பிடிப்பில் நடிகர் வடிவேலு தற்போது கலந்துகொண்டுள்ளார். அவரை படக்குழுவினர் மாலை மரியாதையுடன் வரவேற்றுள்ளனர். மேலும் அந்த புகைப்படத்தில் பழைய கிராமத்து லுங்கி கெட் அப்பில் இருக்கிறார். அந்த புகைப்படங்கள் இணையத்தில் பரவி அனைவரது கவனத்தைப் பெற்றுள்ளது.
டாப் நடிகரிடமே இப்படியா? அஜித்குமார் தமிழ் சினிமாவின் டாப் நடிகர் என்பதையும் அவரை வைக்க படம் இயக்க பல இயக்குனர்கள்…
சாக்லேட் பாய் ஸ்ரீகாந்த் நடிக்க வந்த புதிதில் சாக்லேட் பாய் ஆக பல திரைப்படங்களில் வலம் வந்தார். ஆனால் ஒரு…
கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளி அடுத்த அரசம்பட்டியில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்ட, அ.தி.மு.க., ராஜ்யசபா எம்.பி., தம்பிதுரை செய்தியாளர்களுக்கு பேட்டி…
பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு வீட்டுக்கு போக வேண்டும் என கூறி வெளிநடப்பு செய்தவர் நடிகர் ஸ்ரீ. வழக்கு எண்…
புதுமை இயக்குனர் பா.ரஞ்சித் திரைப்படங்கள் வெளிவரும்போதெல்லாம் அதனுடன் சேர்ந்து பல சர்ச்சைகளும் கிளம்புவது வழக்கம். தமிழ் சினிமாவில் சமூக ஏற்றத்தாழ்வுகளையும்…
தனது காதலியை பாய்ஸ் ஹாஸ்டலுக்குள் சூட்கேஸில் மறைத்து வைத்து அழைத்து சென்ற வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. ஹரியானா மாநிலம்…
This website uses cookies.