விஜயகாந்த் மறைவுக்கு வடிவேலு இதையாச்சும் செய்திருக்கலாம் – பிரபல நடிகர் காட்டம்!
Author: Rajesh2 January 2024, 7:01 pm
விஜயகாந்தின் மறைவு செய்தி அறிந்த வடிவேலு ஒரு இரங்கல் கூட தெரிவிக்கவில்லை என்றும், நேரில் வந்து அஞ்சலி செலுத்தாது ஏன் என்கிற கேள்விகளும் ஒரு பக்கம் எழுந்து வருகிறது. வடிவேலுவுடன் பணியாற்றின் நடிகர்களின் இரங்கலுக்கு போகாததால் அவர் மீது பட விமர்சனங்களும் எழுந்து வருகிறது.
இந்நிலையில், மறைந்த நடிகர் விஜயகாந்த்திற்கும் வடிவேலுக்கும் இடையே சண்டை இருப்பது தமிழக மக்கள் அறிந்த விஷயம் தான். இருவருக்கும் இடையே சண்டை இருப்பதை அறியும் பலருக்கு எதனால் இவர்கள் இருவருக்கும் இடையே இவ்வளவு பெரிய விரிசல் ஏற்பட்டது என்ற காரணம் தெரியாது.
அது என்னவென்று, தற்போது இந்த பதிவில் பார்க்கலாம். அதாவது, இது குறித்து பேசிய விஜயகாந்தின் நெருங்கிய நண்பர்களில் ஒருவரான நடிகர் தியாகு கூறியதாவது, ஒரு நாள் விஜயகாந்த் வக்கீல் இறந்துவிட்டார். வடிவேலுவின் வீட்டிற்கு எதிரே தான் விஜயகாந்தின் வக்கீல் வீடு இருந்திருக்கிறது. வக்கீல் வீட்டிற்கு துக்கம் விசாரிக்க வந்த சிலர் வடிவேலுவின் வீட்டிற்கு அருகே வண்டிகளை பார்க் செய்திருக்கிறார்கள்.
இதை சாதாரண விஷயமாக பொறுத்துக் கொள்ளாத வடிவில் என் வீட்டு பக்கம் என் வண்டி நிறுத்துறீங்க எல்லா வண்டியில் எடுங்க என கேவலமாக சத்தம் போட்டுள்ளார். சாவு வீட்டுக்கு வந்தவங்க கொஞ்ச நேரத்துல கிளம்பிடுவாங்க அதுவரைக்கும் கூட பொறுத்துக்க கூடாதா இப்படி கொச்சையா பேசுறியே இது நியாயமா என கேட்டனர்.
இதன்பின் அங்கு கலவர சூழல் ஏற்பட்டுள்ளது. இதன்பின் உடனடியாக எனக்கு போன் செய்து விஜயகாந்த் ஆட்கள் என்னிடம் வம்பு இழுக்கிறாங்க எனக்கூறி பொய் புகார் செய்தார். பிறகு இந்த விஷயம் அன்று முதல்வராக இருந்த கருணாநிதி காதுக்கு சென்றது. விஜயகாந்தை பழிவாங்க திமுகவிற்கு வடிவேலு பிரச்சாரம் செய்ததற்கு இந்த சம்பவம்தான் காரணமாம். இதனால் தான் அவர் விஜயகாந்தின் இறப்பிற்கு கூட அஞ்சலி செலுத்த வரவில்லையாம்.
என்னதான் இருந்தாலும் இது ஒரு காரணமாக ஏற்றுக்கொள்ளவே முடியவில்லை. அவர் எவ்வளவு உதவிகள் செய்திருக்கிறார். அதை மறந்துவிட்டு இறப்பில் கூட வந்து பார்க்காதது மோசமான மனுஷன் வடிவேலு என்பதை தான் வெளிப்படுத்துகிறது. இந்நிலையில் வடிவேலு கடைசி வரை கேட்படன் உடலுக்கு அஞ்சலி செலுத்தாது குறித்து பேசியுள்ள பிரபல நடிகர் ரஞ்சித், வடிவேலுவுக்கும் விஜயகாந்துக்கும் இடையே உள்ள தனிப்பட்ட பிரச்சனைக்குள் நான் செல்லவில்லை, எதிரியாக இருந்தாலும் இறந்து விட்டால் நேரில் சென்று அஞ்சலி செலுத்துவது தான் தமிழர்களின் பழக்கம். நேரில் செல்ல முடியவில்லை என்றால் கூட ஒரு அறிக்கையாவது வடிவேலு வெளியிட்டிருக்க வேண்டும். அதை கூட செய்யாதது ரொம்பவே தவறான விஷயம் என காட்டமாக பேசினார் நடிகர் ரஞ்சித்.