நடிகர் வடிவேலு நீண்ட நாட்களுக்குப் பிறகு மீண்டும் திரைத் துறைக்கு திரும்பியிருக்கும் படம் ‘நாய் சேகர் ரிட்டர்ன்ஸ்’. இயக்குநர் சுராஜ் இயக்கும் இப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார்.
லைகா புரொடக்ஷன்ஸ் தயாரிக்கும் இப்படத்தில் ராவ் ரமேஷ், ஆனந்த்ராஜ், முனிஷ் காந்த், ரெடின் கிங்ஸ்லி, சிவாங்கி கிருஷ்ணகுமார், ஷிவானி நாராயணன், ‘லொள்ளு சபா’ மாறன், மனோபாலா, ‘லொள்ளு சபா’ சேசு, டி.எம்.கார்த்திக், ‘கேபிஒய்’ ராமர், பாலா உள்ளிட்டோர் நடித்துள்ளனர். கடந்த 14-ம் தேதி சந்தோஷ் நாராயணன் இசையில் வடிவேலு குரலில் வெளியான ‘அப்பத்தா’ பாடல் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இருந்தாலும், இந்த படத்திற்கு போதிய வரவேற்பு கிடைக்கவில்லை.
நான் சேகர் ரிட்டன்ஸ் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் ரீ என்டரி கொடுத்தார் வடிவேலு. இப்படத்தை தொடர்ந்து அடுத்ததாக மாமன்னன், சந்திரமுகி 2 உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார்.
இதில் சந்திரமுகி 2 படப்பிடிப்பின் போது வடிவேலு சொன்ன நேரத்திற்கு வருவதில்லை என கூறப்படுகிறது. மேலும், படத்தின் கால்ஷீட் காலை 9 மணிக்கு என்று கூறினால், முதலில் 10 மணிக்கு வருகிறேன் என்றும், அதன்பின் 11 மணிக்குள் வருகிறேன் என்றும், இதன்பின் கேட்டால் 12 மணிக்குள் வந்துவிடுகிறேன் என்று வடிவேலு கூறுகிறாராம் . 12 மணி ஆன பின் அவருக்கு போன் கால் செய்தால் ஸ்விச் ஆஃப் என்று வருகிறதாம். இதனால் படக்குழு வடிவேலு மீது பயங்கர கோபத்தில் இருக்கின்றனராம்.
இப்படி செய்து வருவதால் சந்திரமுகி 2 படத்தில் இருந்து வடிவேலுவின் பல காட்சிகளை தூக்கிவிட்டதாகவும் படக்குழு தறப்பில் கூறப்படுகிறது. சந்திரமுகி 2வில் ராகவா லாரன்ஸ் கதாநாயகனாக நடிக்க, கங்கனா ரனாவத் கதாநாயகியாகவும், முன்னணி நட்சத்திரங்கள் ராதிகா உள்ளிட்டோரும் நடித்து வருவது குறிப்பிடத்தக்கது.
இன்னும் 3 நாள்தான் மாமே… ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமார் நடித்துள்ள “குட் பேட் அக்லி” திரைப்படம் வருகிற 10…
ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம் மாவட்டத்தின் தெலுங்கு தேச கட்சியின் மாவட்ட தலைவர் அனந்த லட்சுமி. இவர் ஏற்கனவே காக்கிநாடா தொகுதியில்…
கோவையில் 17 மற்றும் 14 வயது சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக எழுந்த புகாரின் பேரில், சர்ச் பாதிரியார் மீது…
சர்வதேச சந்தையில் சமையல் எரிவாயு விலை பொறுத்து சிலிண்டர் விலை நிர்ணயம் செய்யப்படுகிறது. அந்த வகையில் சிலிண்டர் விலை தற்போது…
திருவள்ளூர் மாவட்டம் கடம்பத்தூர் இந்திரா நகர் பகுதியைச் சேர்ந்தவர் ஹேமலதா இவருக்கு திருமணம் ஆகி கணவருடன் பிரிந்து வாழ்ந்து வரும்…
மரண வெயிட்டிங் மாமே ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமார் நடித்துள்ள “குட் பேட் அக்லி” திரைப்படம் வருகிற 10 ஆம்…
This website uses cookies.