கேப்டனுக்கு அஞ்சலி செலுத்த வராத வடிவேலு….”கலைஞர் 100″ விழாவிற்கு முதல் ஆளாக வந்த கொடுமை!

Author: Rajesh
8 January 2024, 8:06 pm

தமிழ் சினிமாவில் யாரும் எட்டக்கூடமுடியாத வகையில் மிகப்பெரிய காமெடி நடிகராக வலம் வந்தவர் வைகைப்புயல் வடிவேலு. தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத நகைச்சுவை நடிகரான இவர் எப்படிபட்ட காமெடியாக இருந்தாலும் தனது பாடி லேங்குவேஜ் மூலம் நிலைநிறுத்திடுவார்.

vijayakanth-updatenews360

ஒவ்வொரு தலைமுறைக்கும் ஒவ்வொரு நகைச்சுவை நடிகர்கள் மாறுவது வழக்கம். ஆனால் வடிவேலுவுக்குப் பின் அடுத்தாக இவர் என சொல்ல முடியாத அளவுக்கு அவர் இருந்து வருகிறார். நடிகர் ராஜ்கிரண் தான் வடிவேலுவை தமிழ் சினிமாவில் அறிமுகம் செய்துவைத்தார். `என் தங்கை கல்யாணி’ படம் மூலம் சிறிய பாத்திரத்தில் தன் பயணத்தைத் துவங்கிய வடிவேலு தொடர்ந்து என் ராசாவின் மனசிலே, சின்ன கவுண்டர், சிங்கார வேலன், தேவர் மகன், காதலன், காதலர் தேசம் என தொன்னூறுகளின் இறுதியில் கவனிக்கப்படும் முகமாக மாறினார்.

அதன் பின்னர் , ரஜினி ,கமல் , அஜித், விஜய், பிரசாந்த் என பல முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்திருக்கிறார். இதனிடையே சமீப நாட்களாக நடிகர் வடிவேலு குறித்து அடுக்கடுக்கான புகார்கள் வந்த வண்ணம் உள்ளது. பணத்திமிரு, நான் தான் என்ற தலைக்கனம் உள்ளிட்டவை வடிவேலுவின் வாழ்க்கையை இன்னும் அழித்துக்கொண்டு தான் இருக்கிறது. அவ்வளவு ஏன் தன்னுடைய ஆரம்ப காலத்தில் சினிமாவில் வாய்ப்பு கொடுத்து… புத்தாடைகளை வாங்கி கொடுத்து உதவிய கேப்டன் விஜயகாந்த் மறைவுக்கு கூட அஞ்சலி செலுத்த வரவில்லை. இதனால் மக்களின் வெறுப்பிற்கு ஆளாகினார். ஆனால், நேற்று சென்னை கிண்டியில் நடந்த கலைஞர் நூற்றாண்டு விழாவில் முதல் ஆளாக பங்கேற்றுள்ளார். அதன் புகைபடங்கள் இணையத்தில் வெளியாக மக்களுக்கு அவர் மீது இருந்த கொஞ்சம் நெஞ்சம் இருந்த மரியாதையும் போய்விட்டது.

  • Vidamuyarchi shooting completed அஜித்தே..இனி நம்ம ஆட்டம் தான்..விடாமுயற்சி படப்பிடிப்பு ஓவர்…இயக்குனர் வெளியிட்ட பதிவு..!
  • Views: - 576

    0

    0