‘ஜெயலலிதா’ அம்மாவே சொல்லி இருக்காங்க..பிரபுதேவா நிகழ்ச்சியில் வடிவேல் பர பர பேச்சு.!

Author: Selvan
24 February 2025, 7:38 pm

பிரபுதேவா நடன நிகழ்ச்சியில் வடிவேல் பேச்சு

நடிகரும் நடன இயக்குனருமான பிரபுதேவாவின் முதல் நடன நிகழ்ச்சி சென்னையில் பிரமாண்டமாக பெப்ரவரி 22 ஆம் தேதி நடைபெற்றது.இதில் ஏராளமான இளைஞர்கள் மற்றும் ரசிகர்கள் கலந்து கொண்டு ஆட்டம் போட்டு வைப் செய்தனர்.

இதையும் படியுங்க: அடேங்கப்பா.! எம்ஜிஆர்-ன் கருப்பு கண்ணாடி ரகசியம்…போட்டுடைத்த பார்த்திபன்.!

ஏராளமான திரையுலகத்தை சார்ந்த பல பிரபலங்கள் மேடையில் நடனம் ஆடினார்கள்.பிரபுதேவாவின் மகன் ,சாண்டி மாஸ்டர்,நடிகர் பரத்,சாந்தனு,பிரசாந்த்,பார்வதி நாயர்,சாக்ஷி அகர்வால் உட்பட பலர் நடனம் ஆடி ரசிகர்களை குஷிப்படுத்தினார்கள்.

மேலும் பல நட்சத்திரங்களையும் பிரபுதேவா சிறப்பு விருந்தினர்களாக அழைத்துள்ளார்,தனுஷ் வடிவேலு எஸ் ஜே சூர்யா பாக்கியராஜ் ரம்பா மீனா ரோஜா சங்கீதா போன்றோர் கலந்து கொண்டனர்.

நடிகர் தனுஷ் ரவுடி பேபி பாடலுக்கு நடனம் ஆடியும்,பிரபு தேவா வடிவேல் பேட்டை ராப் பாடலுக்கு நடனம் ஆடியும் அசத்தினார்கள்,அப்போது மேடையில் பேசிய வடிவேல் பிரபு தேவா என்னை இந்த நிகழ்ச்சிக்கு வர சொன்னாரு வந்தேன்,இந்தியாவிற்கு கிடைச்ச மைக்கேல் ஜாக்சன் இவரு,நமக்கு கிடைச்ச மிகப்பெரிய பொக்கிஷம் என ஜெயலலிதா அம்மாவே சொல்லி இருக்காங்க,உங்கள மாதிரி நானும் ஒரு ரசிகனா இந்த நிகழ்ச்சியை நேரில் பார்த்து ரசித்தேன்,இவரு என்னைய கூப்புடாம இருந்திருந்தா நான் ரொம்ப கோபப்பட்டிருப்பேன்,ஆனா நீங்க வந்தே ஆகணும்னு சொன்னதுனால எனக்கு ரொம்ப மகிழ்ச்சியாக இருந்தது என நெகிழ்ச்சியோடு பேசியிருப்பார் வடிவேலு.

  • vaadivaasal movie shooting starts on august ஒரு வழியாக தொடங்கப்போகுது வாடிவாசல்? ஒரு படத்துக்கு இவ்வளவு இழுபறியா?