‘Cook With Comali’-யை காலிபண்ண களமிறக்கப்பட்ட வடிவேலு.. ஒரு எபிசோடுக்கு இத்தனை கோடியாம்..!
Author: Vignesh20 May 2024, 4:44 pm
தமிழ் சினிமாவில் யாரும் எட்டக்கூடமுடியாத வகையில், மிகப்பெரிய காமெடி நடிகராக வலம் வந்தவர் வைகைப்புயல் வடிவேலு. தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத நகைச்சுவை நடிகரான இவர் எப்படிபட்ட காமெடியாக இருந்தாலும் தனது பாடி லேங்குவேஜ் மூலம் நிலைநிறுத்திடுவார்.

ஒவ்வொரு தலைமுறைக்கும் ஒவ்வொரு நகைச்சுவை நடிகர்கள் மாறுவது வழக்கம். ஆனால் வடிவேலுவுக்குப் பின் அடுத்தாக இவர் என சொல்ல முடியாத அளவுக்கு அவர் இருந்து வருகிறார்.
இந்நிலையில், தற்போது வடிவேலுவின் கைவசம் பெரிய அளவில் படங்கள் இல்லை என்று கூறப்பட்டாலும், வடிவேலு சின்னத்திரையில் களமிறங்கி உள்ளார். தனியார் தொலைக்காட்சியில் ரியாலிட்டி ஷோவில் பங்கேற்க வடிவேலு உள்ளார். நடிகர் வடிவேலுக்கு சினிமா கை கொடுக்காத நிலையில், தற்போது சின்னத்திரைக்கு தாவி உள்ளார். அதாவது, டாப் குக்கு டூப் குக்கு ஷோவில் கலந்துகொள்ள வடிவேலு வாங்கி இருக்கும் சம்பளம் பற்றிய விவரம் வெளியாகி இருக்கிறது. ஒரு எபிசோடுக்கு ஒரு கோடி ரூபாய் சம்பளம் பெறுகிறார். ஒரு நாளைக்கு இவ்வளவு சம்பளமா என சின்னத்திரை ரசிகர்கள் ஷாக் ஆகி உள்ளனர்.