என்ன மீறி எப்படி நீ நடிக்கலாம்னு மூஞ்சிலே அடிச்சாரு… மட்டமான ஆளு வடிவேலு – கிழித்த பிரபலம்!
Author: Shree23 June 2023, 1:20 pm
காமெடி உலகின் ஜாம்பவாக இருந்து வரும் வடிவேலு தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோக்கள் கூட இவருடைய கால்ஷீட்டுக்காக வரிசையில் நிற்கும் அளவுக்கு ரசிகர்களிடையே மிகப்பெரிய வரவேற்பு பெற்று இருந்தார். குறிப்பாக இவரது டயலாக் டெலிவிரி, பாடி லேங்குவேஜ் உள்ளிட்டவரை சிறப்பம்சம் வாய்ந்தவையாக பார்க்கப்படும். வடிவேலுவின் காமெடிகளால் மட்டுமே ஓடிய திரைப்படங்களும் உண்டு. ஒரு சில படங்களில் இவர் ஹீரோவாகவும் நடித்தார்.
ஒவ்வொரு தலைமுறைக்கும் ஒவ்வொரு நகைச்சுவை நடிகர்கள் மாறுவது வழக்கம். ஆனால் வடிவேலுவுக்குப் பின் அடுத்தாக இவர் என சொல்ல முடியாத அளவுக்கு அவர் இருந்து வருகிறார். நடிகர் ராஜ்கிரண் தான் வடிவேலுவை தமிழ் சினிமாவில் அறிமுகம் செய்துவைத்தார். `என் தங்கை கல்யாணி’ படம் மூலம் சிறிய பாத்திரத்தில் தன் பயணத்தைத் துவங்கிய வடிவேலு தொடர்ந்து என் ராசாவின் மனசிலே, சின்ன கவுண்டர், சிங்கார வேலன், தேவர் மகன், காதலன், காதலர் தேசம் என தொன்னூறுகளின் இறுதியில் கவனிக்கப்படும் முகமாக மாறினார்.
அதன் பின்னர் , ரஜினி ,கமல் , அஜித், விஜய், பிரசாந்த் என பல முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்திருக்கிறார். இதனிடையே சமீப நாட்களாக நடிகர் வடிவேலு குறித்து அடுக்கடுக்கான புகார்கள் வந்த வண்ணம் உள்ளது. பணத்திமிரு, நான் தான் என்ற தலைக்கனம் உள்ளிட்டவை வடிவேலுவின் வாழ்க்கையை இன்னும் அழித்துக்கொண்டு தான் இருக்கிறது.
இந்நிலையில் பிரபல பத்திரிக்கையாளர் செய்யாறு பாலு பேட்டி ஒன்றில் வடிவேலு தன்னுடன் நடிக்கும் சக நடிகர்களை வளரவே விடமாட்டார். அதையும் மீறி அவர்கள் performer செய்தால் அவர்களை ஸ்பாட்டிலே அடித்து கொடுமை படுத்துவார் என கூறி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறார். அப்படித்தான் ஒரு முறை சிங்கமுத்துவுடன் ” சாராயம் காய்ச்சும் ஒரு லேடியை பிடிக்க செல்லும்போது பின்னால் இருக்கும் ஒரு நபர் சிறப்பாக நடித்ததை மானிட்டரில் சென்று பார்த்தார். பின்னர் மீண்டும் வந்து நடித்த வடிவேலு அவரை முகத்தில் பளார் பளார் என அறைத்து என்ன performance’ அ பண்ற நீ performance? என கேட்டு அடித்தார். அந்த அளவிற்கு அடுத்தவர்கள் வளரவே கூடாது என கெட்ட எண்ணம் பிடித்தவர் வடிவேலு என அவர் கூறினார் .