தமிழ் சினிமாவில் கவுண்டமணி – செந்தில்க்கு அடுத்தபடியாக காமெடி நடிகராக மிக பிரபலமாக திகழ்ந்து வந்தவர் நடிகர் வடிவேலு. ரஜினி, கமல், விஜயகாந்த், விஜய், விக்ரம் என முன்னணி நடிகர்கள் படத்தில் நடித்து தனக்கென தனி ரசிகர் பட்டாளத்தை பெற்றவர். சில வருடங்களுக்கு முன், எதிர்பாராத விதமாக, 24 ஆம் புலிகேசி படத்தில் ஏற்பட்ட பிரச்சனையால், சினிமாவில் நடிக்க தடை விதித்து இவருக்கு ரெட் கார்ட் கொடுக்கப்பட்டது.
சில நிகழ்ச்சிகளில் பங்கேற்ற வடிவேலு, தான் சினிமாவில் நடிக்காமல் இருப்பது பெரும் வலியையும் வேதனையையும் கொடுப்பதாக கூறி கலங்கி வந்தார். பின்னர், தடையை நீக்கியதற்கு பின், மீண்டும் ரீஎண்ட்ரி கொடுத்து, படங்களில் கமிட்டாகி நடித்து வருகிறார். சமீபத்தில், இவர் கதாநாயகனாக நடித்து வெளியான நாய் சேகர் ரிட்டர்ன்ஸ் படம் வெளியாகி சுமாரான விமர்சனத்தை பெற்றது. சந்திரமுகி 2, மாமன்னன் போன்ற திரைப்படங்களில் நடித்து வருகிறார்.
இந்நிலையில் கடந்த சில மாதங்களாக, நடிகர் வடிவேலு குறித்து சக நடிகர் நடிகைகள் பற்றிய கலவையான கருத்துக்களை தங்களது பேட்டிகளில் கூறி வருகின்றனர். அந்த வகையில், பிரபல தயாரிப்பாளரும் நடிகருமான சித்ரா லட்சுமணன் அளித்த சமீபத்திய பேட்டி ஒன்று வைரலாகி வருகிறது. இம்சை அரசன் 23 ஆம் புலிகேசி திரைப்பட வெற்றியை தொடர்ந்து, இம்சை அரசன் 24 ஆம் புலிகேசி திரைப்படத்தில் வடிவேலு நடிக்க ஒப்பந்தமானார்.
இத்திரைப்படத்தின் அறிவிப்பு வெளிவந்தபோது இத்திரைப்படத்திற்கு மிகுந்த எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால் வடிவேலு சரியாக படப்பிடிப்பிற்கு ஒத்துழைப்பு தர மறுத்ததால் இத்திரைப்படம் அப்படியே டிராப் ஆனது என கூறப்பட்டது. மேலும் இதனால் இத்திரைப்படத்தின் தயாரிப்பாளரான இயக்குனர் ஷங்கர், தனக்கு பெரும் நஷ்டம் ஏற்பட்டதாக கூறி தயாரிப்பாளர் சங்கத்தில் புகார் அளித்தார்.
இந்நிலையில், பிரபல தயாரிப்பாளரும் நடிகருமான சித்ரா லட்சுமணனிடம் ரசிகர் ஒருவர், “வடிவேலு ஏன் சிம்புதேவன் போன்ற நல்ல இயக்குனர்கள் கூறுகிற கதையை கேட்டு நடிக்காமல், கதையில் தலையிட்டு தன்னை தானே தாழ்ந்த நிலைக்கு கொண்டுப்போனார்?” என கேட்டிருந்தார். இதற்கு பதிலளித்த சித்ரா லட்சுமணன், “வடிவேலு தாழ்ந்த நிலைக்குச் சென்றதாக சொல்ல முடியாது.
ஆனால் சிம்புதேவனின் திரைப்படத்தில் அவர் கொஞ்சம் அட்ஜெஸ்ட் செய்து நடித்திருக்கலாம் என்பது என்னுடைய கருத்து. இம்சை அரசன் 23ம் புலிகேசி என்ற வெற்றிப்படத்தை வடிவேலுவுக்கு தந்தவர் சிம்புதேவன். வடிவேலுவை மனதில் வைத்துக்கொண்டு எல்லா காட்சிகளையும் மிகச்சிறப்பாக வடிவமைத்திருந்தார் சிம்புதேவன். அப்படிப்பட்ட இயக்குனரோடு வடிவேலு தொடர்ந்து படம் பண்ணியிருந்தால் நிச்சயமாக பல வெற்றித்திரைப்படங்களை அவர் தந்திருக்க முடியும்” என கூறியுள்ளார்.
பெண் உடையுடன் குடியிருப்பில் பிக்பாஸ் விக்ரமன் ஓடிய வீடியோ வைரலான நிலையில், இதுகுறித்து அவரது மனைவி விளக்கம் அளித்துள்ளார். சென்னை:…
ஏழை எளிய மாணவர்களின் கல்வியில் அரசியல் செய்வது யார் என்று தமிழக மக்களுக்கு நன்கு தெரியும் என அண்ணாமலை முதல்வர்…
தூத்துக்குடி, ஸ்ரீவைகுண்டம் அருகே பேருந்தில் சென்று கொண்டிருந்த பள்ளி மாணவரை அரிவாளால் வெட்டிய கும்பலை போலீசார் தேடி வருகின்றனர். தூத்துக்குடி:…
சல்மான் கான் - ராஷ்மிகா நடிப்பில் உருவாகியுள்ள சிக்கந்தர் படம் சர்கார் படத்தின் ரீமேக் அல்ல என இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ்…
ராணிப்பேட்டையில் பாஜக நிர்வாகி, தனது வயல்வெளியில் மர்ம நபர்களால் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டது தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.…
கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்த போக்சோ வழக்கு கைது மயங்கி விழுந்த நிலையில் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.…
This website uses cookies.