மழைத்துளி மழைத்துளி மண்ணில் சங்கமம்… வடிவேலு குரல் கேட்டு மெர்சலான ரஹ்மான் (வீடியோ)

Author: Shree
7 July 2023, 11:49 am

தமிழ் சினிமாவின் மிகவும் திறமை வாய்ந்த கலை நுணுக்கம் அதிகம் தெரிந்து முறையாக திரைப்படம் எடுக்கும் சிறந்த இயக்குநர்களில் ஒருவர் மாரி செல்வராஜ். இவர் பல்வேறு புத்தகங்களையும் எழுதியிருக்கிறார். பிரபல இயக்குனரான ராமிடன் உதவி இயக்குனராக சுமார் 10 ஆண்டுகளுக்கு மேல் பணிபுரிந்திருக்கிறார்.

அவரிடம் திரை நுணுக்கங்களை கற்றுத்தெறிந்து திரைத்துறையில் இயக்குனராக அவதாரம் எடுத்தார். பிரபல வார இதழ் பத்திரிகையான “மறக்க நினைக்கிறேன்” என்ற தொடரை எழுதியுள்ளார். தமிழில் பெரியேறும் பெருமாள் படத்தை இயக்கி மாபெரும் வெற்றிப்படைத்தார். திருநெல்வேலிக்குப் அருகில் இருக்கும் புளியங்குளம் கிராமத்தைச் சேர்ந்த விவசாயத்தை தொழிலாக கொண்ட பெற்றோருக்கு பிறந்த மாரி செல்வராஜ் கிராமங்கள் சார்ந்த படங்களை இயக்குவதிலேயே ஆர்வமிக்கவராக இருக்கிறார்.

இவர் தனுஷை வைத்து கர்ணன் படத்தை இயக்கியிருந்தார். அதன் பிறகு தற்போது மாமன்னன் படத்தை இயக்கி அண்மையில் அப்படம் வெளியாகி நல்ல விமர்சனத்தை பெற்று வசூல் ஈட்டி வருகிறது. இப்படத்தில் மாமன்னன் கேரக்டரில் உதயநிதியின் அப்பாவாக வடிவேலு அழுத்தமான ரோலில் நடித்திருந்தார். மேலும் மாமன்னன் படத்தில் இடம்பெற்ற எமோஷனலான பாடல் ” ராசாக்கண்ணு ” பாடலை வடிவேலு தன் சொந்த குரலில் பாடி மனம் உருக்கச்செய்தார். இப்படத்திற்கு ஏஆர் ரஹ்மானின் உருக்கமான இசை படத்திற்கு மிகப்பெரிய பலத்தை கொடுத்தது.

இந்நிலையில் மாமன்னன் இசைவெளியீட்டு விழாவில் ஏஆர் ரஹ்மான் வடிவேலுவின் பாடும் திறமையை கண்டு வியந்து மெர்சலாகிவிட்டார். வடிவேலு எவ்வளவு பெரிய பாடகர்…. முதன்முதலில் அவரை ராசா கண்னு பாடல் பாட ஸ்டுடியோவுக்கு கூப்பிட்டு மழைத்துளி மழைத்துளி மண்ணில் சங்கமம் பாடல் பாட சொல்லிக்கேட்டான் அவர் பாடினதும் நான் மிரண்டுவிட்டேன். என கூறி அந்த பாடலை மேடையில் இசைப்புயல் + வைகைப்புயல் இருவரும் சேர்ந்து பாடி சிலிர்க்கவைத்தார்கள். இதோ அந்த வீடியோ:

https://www.youtube.com/shorts/76Yww8Aybso
  • Vidamuyarchi shooting completed அஜித்தே..இனி நம்ம ஆட்டம் தான்..விடாமுயற்சி படப்பிடிப்பு ஓவர்…இயக்குனர் வெளியிட்ட பதிவு..!
  • Views: - 545

    8

    0