எனக்கே கம்பி நீட்டிட்டாங்க, நான் பட்ட பாடு இருக்கே- புலம்பித் தள்ளிய வடிவேலு
Author: Prasad22 April 2025, 12:33 pm
வடிவேலுவின் கம்பேக்
2011 ஆம் ஆண்டு தேர்தலில் திமுகவிற்கு ஆதரவாக பிரச்சாரம் செய்தார் வடிவேலு. அந்த சமயத்தில் திமுகவை எதிர்த்து நின்ற விஜயகாந்தை மிகவும் கடுமையான சொற்களால் விமர்சித்தார் வடிவேலு. அந்த தேர்தலில் திமுக படுதோல்வியடைந்த நிலையில் அதன் பின் வடிவேலுவுக்கு பட வாய்ப்புகள் குறைந்துப்போனது.
“இம்சை அரசன் 24 ஆம் புலிகேசி” திரைப்படத்திற்கு ஒப்பந்தம் செய்யப்பட்டு படப்பிடிப்பிற்கு ஒத்துழைப்பு தரவில்லை என்று அத்திரைப்படத்தின் தயாரிப்பாளரான ஷங்கர் புகார் அளித்ததை தொடர்ந்து வடிவேலுவுக்கு ரெட் கார்டு கொடுக்கப்பட்டது. இவ்வாறு பல ஆண்டுகள் வடிவேலு சினிமாவில் தலைகாட்டாமலே இருந்தார்.

ஒரு கட்டத்தில் அவர் மீதான தடை நீக்கப்பட மீண்டும் திரைப்படங்களில் நடிக்கத் தொடங்கினார். அந்த வகையில் தற்போது சுந்தர் சியுடன் இணைந்து “கேங்கர்ஸ்” திரைப்படத்தில் நடித்துள்ளார் வடிவேலு. இத்திரைப்படத்தின் டிரைலரில் வடிவேலு இடம்பெற்ற துணுக்குகள் ரசிக்கும்படியாக இருந்த நிலையில் இத்திரைப்படம் வடிவேலுவுக்கு நிச்சயம் கம்பேக் ஆக இருக்கும் என கூறுகின்றனர்.
நான் பட்ட பாடு…
“கேங்கர்ஸ்” திரைப்படம் வருகிற 24 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ள நிலையில் சுந்தர் சியும் வடிவேலுவும் புரொமோஷன் பேட்டிகளில் பிசியாக வலம் வருகின்றனர். அந்த வகையில் சமீபத்தில் ஒரு பேட்டியில் அவர்கள் கலந்துகொண்டபோது நிருபர், “நீங்கள் சொன்ன வசனங்களில் எதாவது ஒன்றை டைட்டிலாக பயன்படுத்தியிருக்கீறீர்களா?” என்று கேட்டார்.
அதற்கு வடிவேலு, “எங்க படத்தில் பேசிய வசனங்களை எல்லாம் வேறு நபர்கள் டைட்டிலாக வைத்து எத்தனை திரைப்படங்கள் ஹிட் கொடுத்திருக்கிறார்கள் தெரியுமா? அந்த வசனங்களை டைட்டிலாக வைக்க எனக்கே தர மறுத்துவிட்டார்கள். நான் பட்ட பாடு எனக்கல்லவா தெரியும்” என்று பதிலளித்தார்.
“நாய் சேகர்” என்ற டைட்டில் வடிவேலு படத்திற்கு கிடைக்காத நிலையில் “நாய் சேகர் ரிட்டன்ஸ்” என்று டைட்டிலை மாற்றி படத்தை வெளியிட்ட சம்பவத்தை குறித்துதான் அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.