சக நடிகர்களை பிச்சைக்காரர்கள் போன்றும் நாயை விட கேவலமாகவும் நடத்திய வடிவேலு – பகீர் கிளப்பிய பிரபலம்!

Author: Shree
19 July 2023, 2:13 pm

காமெடி உலகின் ஜாம்பவாக இருந்து வரும் வடிவேலு தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோக்கள் கூட இவருடைய கால்ஷீட்டுக்காக வரிசையில் நிற்கும் அளவுக்கு ரசிகர்களிடையே மிகப்பெரிய வரவேற்பு பெற்று இருந்தார். குறிப்பாக இவரது டயலாக் டெலிவிரி, பாடி லேங்குவேஜ் உள்ளிட்டவரை சிறப்பம்சம் வாய்ந்தவையாக பார்க்கப்படும். வடிவேலுவின் காமெடிகளால் மட்டுமே ஓடிய திரைப்படங்களும் உண்டு. ஒரு சில படங்களில் இவர் ஹீரோவாகவும் நடித்தார்.

ஒவ்வொரு தலைமுறைக்கும் ஒவ்வொரு நகைச்சுவை நடிகர்கள் மாறுவது வழக்கம். ஆனால் வடிவேலுவுக்குப் பின் அடுத்தாக இவர் என சொல்ல முடியாத அளவுக்கு அவர் இருந்து வருகிறார். நடிகர் ராஜ்கிரண் தான் வடிவேலுவை தமிழ் சினிமாவில் அறிமுகம் செய்துவைத்தார். `என் தங்கை கல்யாணி’ படம் மூலம் சிறிய பாத்திரத்தில் தன் பயணத்தைத் துவங்கிய வடிவேலு தொடர்ந்து என் ராசாவின் மனசிலே, சின்ன கவுண்டர், சிங்கார வேலன், தேவர் மகன், காதலன், காதலர் தேசம் என தொன்னூறுகளின் இறுதியில் கவனிக்கப்படும் முகமாக மாறினார்.

அதன் பின்னர் , ரஜினி ,கமல் , அஜித், விஜய், பிரசாந்த் என பல முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்திருக்கிறார். இதனிடையே சமீப நாட்களாக நடிகர் வடிவேலு குறித்து அடுக்கடுக்கான புகார்கள் வந்த வண்ணம் உள்ளது. பணத்திமிரு, நான் தான் என்ற தலைக்கனம் உள்ளிட்டவை வடிவேலுவின் வாழ்க்கையை இன்னும் அழித்துக்கொண்டு தான் இருக்கிறது என பல காமெடி நடிகர்கள் சமீப நாட்களாக பேட்டியில் பேசியதெல்லாம் கேட்டிருப்பீர்கள். கடைசியாக வடிவேலு மாமன்னன் படத்தில் நடித்து அனைவரது கைத்தட்டல்களையும் பெற்றார்.

இந்நிலையில் வடிவேலு குறித்து பேட்டி ஒன்றில் பேசியுள்ள பிரபல பத்திரிக்கையாளர் செய்யாறு பாலு, ஒரு முறை நான் வடிவேலுவை பேட்டி எடுக்க, சாலிகிராமத்தில் உள்ள அவரது அலுவலகத்திற்கு சென்றேன். அந்த நேரத்தில் வடிவேலுவுடன் நடித்த ஜூனியர் ஆர்ட்டிஸ்ட் எல்லோரும் அவரது ஆஃபிஸ் வாசலில் வந்து நின்றிருக்கிறார்கள். பல மணிநேரம் ஆகியும் அவர்கள் எல்லோரும் நின்று கொண்டே இருந்தார்கள். பின்னர் பேட்டி முடித்துவிட்டு நான் கீழே இறங்கி வந்ததும்… ஏன் நின்றுக்கொண்டு இருக்கிறீர்கள்? என கேட்டதற்கு,

‘இல்ல ஷூட்டிங் முடிச்சிட்டு நாங்க ஆபிஸுக்கு இங்க வருவோம். அவர் வந்து பார்த்துட்டு பார்த்துட்டு போவாரு. கீழ உட்காரக்கூட கூடாது. அவர் சொல்லாமல் நாங்கள் வீட்டுக்கும் போகக்கூடாது. அப்படி போய்விட்டால் மறுநாள் நடிப்பதற்கு எங்களுக்கு வாய்ப்பு கொடுக்க மாட்டாரு’ என வேதனை பகிர்ந்தனராம். ஆகவே சக நடிகர்களுக்கு வாய்ப்பு தர அவர்களை பிச்சைக்காரர்கள் போன்றும் நாயை விட கேவலமாகவும் நடத்துபவர் வடிவேலு என்பது இதன் மூலம் தெரியவந்துள்ளது.

  • Bigg Boss Anshitha akbarsha Pregnant அன்ஷிதா 3 மாதம் கர்ப்பமா? பிக் பாஸ் வீட்டுக்குள் என்ன நடக்குது?!
  • Views: - 560

    0

    2