கவுண்டமணியின் காரை இடிக்க வந்த வடிவேலுவின் கார்! இப்படியெல்லாம் நடந்துருக்கா?
Author: Prasad10 April 2025, 6:25 pm
வடிவேலு மீதான புகார்கள்
வடிவேலு மிகப் பெரிய காமெடி நடிகராக வளர்ந்த பிறகு அவர் தனது சக நடிகர்களை மதிக்க மாட்டார் எனவும் தரம் தாழ்ந்து நடந்துகொள்வார் எனவும் அவருடன் நடித்த நடிகர்கள் பலரும் பல பேட்டிகளில் கூறி வந்தனர். இந்த நிலையில் வடிவேலுவை வைத்து படம் இயக்கிய இயக்குனர் வி.சேகர் சமீபத்திய பேட்டி ஒன்றில் வடிவேலுவை குறித்து ஒரு தகவலை பகிர்ந்துகொண்டுள்ளார்.

காரை இடிக்க வந்த வடிவேலு
வி.சேகர் இயக்கிய “நான் பெத்த மகனே” என்ற திரைப்படத்தில் கவுண்டமணி, செந்தில், வடிவேலு ஆகியோர் இணைந்து நடித்திருந்தனர். இத்திரைப்படத்தின் படப்பிடிப்பின்போது அந்த சமயத்தில்தான் புதிதாக கார் ஒன்றை வாங்கிய வடிவேலு படப்பிடிப்புத் தளத்திற்கு வருகையில் பார்க்கிங்கில் நின்றுகொண்டிருந்த செந்திலின் காரையும் கவுண்டமணியின் காரையும் இடிப்பது போல வேகமாக வந்து சட்டென விலகி காரை நிறுத்தினாராம்.
இதனை பார்த்த கவுண்டமணியும் செந்திலும் இயக்குனரை அழைத்து இந்த விஷயத்தை சொல்ல, இயக்குனர் வடிவேலுவிடம் இதனை விசாரிக்க, அதற்கு வடிவேலு, “காரை இடிச்சேனா, பார்க்கிங் நிப்பாட்ட இடம் இல்லை, அதனாலதான் அங்க நிப்பாட்டுனேன்” என்று பதில் கூறினாராம்.

அது மட்டுமல்லாது செந்திலையும் கவுண்டமணியையும் கடுப்பேற்றுவதற்காக இயக்குனரை காரில் ஏற்றிக்கொண்டு அவர்களின் கண் முன்னாலேயே ரவுண்டு போய்விட்டு வந்தாராம் வடிவேலு. “நம்ம வீட்டுல எவ்வளவோ கார் இருக்கு. இவன் ஒரே ஒரு கார் வாங்கிட்டு இவ்வளவு பந்தா பண்றான்” என்று கவுண்டமணி செந்திலிடம் கிசுகிசுத்துக்கொண்டாராம். இதனை தொடர்ந்து வி.சேகரின் அடுத்த படமான “காலம் மாறிப்போச்சு” திரைப்படத்தில் கவுண்டமணி வடிவேலுவுடன் இணைந்து நடிக்கமாட்டேன் என கூறிவிட்டாராம்.