கடைசிவரை விஜயகாந்தை பார்க்காத வடிவேலு.. அல்ப விஷயத்துக்காக எதிரியாய் மாறிய பிளாஷ்பேக் சம்பவம்..!

Author: Vignesh
30 December 2023, 11:45 am

விஜயகாந்தின் மறைவு செய்தி அறிந்த வடிவேலு ஒரு இரங்கல் கூட தெரிவிக்கவில்லை என்றும், நேரில் வந்து அஞ்சலி செலுத்தாது ஏன் என்கிற கேள்விகளும் ஒரு பக்கம் எழுந்து வருகிறது. வடிவேலுவுடன் பணியாற்றின் நடிகர்களின் இரங்கலுக்கு போகாததால் அவர் மீது பட விமர்சனங்களும் எழுந்து வருகிறது.

vijayakanth-updatenews360

இந்நிலையில், மறைந்த நடிகர் விஜயகாந்த்திற்கும் வடிவேலுக்கும் இடையே சண்டை இருப்பது தமிழக மக்கள் அறிந்த விஷயம் தான். இருவருக்கு இடையே சண்டை இருப்பதை அறியும் பலருக்கு எதனால் இவர்கள் இருவருக்கும் இடையே இவ்வளவு பெரிய விரிசல் ஏற்பட்டது என்ற காரணம் தெரியாது.

vijayakanth-updatenews360

அது என்னவென்று, தற்போது இந்த பதிவில் பார்க்கலாம். அதாவது, இது குறித்து பேசிய விஜயகாந்தின் நெருங்கிய நண்பர்களில் ஒருவரான நடிகர் தியாகு கூறியதாவது, ஒரு நாள் விஜயகாந்த் வக்கீல் இறந்துவிட்டார். வடிவேலுவின் வீட்டிற்கு எதிரே தான் விஜயகாந்தின் வக்கீல் வீடு இருந்திருக்கிறது. வக்கீல் வீட்டிற்கு துக்கம் விசாரிக்க வந்த சிலர் வடிவேலுவின் வீட்டிற்கு அருகே வண்டிகளை பார்க் செய்திருக்கிறார்கள்.

vijayakanth-updatenews360

இதை சாதாரண விஷயமாக பொறுத்துக் கொள்ளாத வடிவில் என் வீட்டு பக்கம் என் வண்டி நிறுத்துறீங்க எல்லா வண்டியில் எடுங்க என கேவலமாக சத்தம் போட்டுள்ளார். சாவு வீட்டுக்கு வந்தவங்க கொஞ்ச நேரத்துல கிளம்பிடுவாங்க அதுவரைக்கும் கூட பொறுத்துக்க கூடாதா இப்படி கொச்சையா பேசுறியே இது நியாயமா என கேட்டனர்.

இதன்பின் அங்கு கலவர சூழல் ஏற்பட்டுள்ளது. இதன்பின் உடனடியாக எனக்கு போன் செய்து விஜயகாந்த் ஆட்கள் என்னிடம் வம்பு இழுக்கிறாங்க எனக்கூறி பொய் புகார் செய்தார். பிறகு இந்த விஷயம் அன்று முதல்வராக இருந்த கருணாநிதி காதுக்கு சென்றது. விஜயகாந்தை பழிவாங்க திமுகவிற்கு வடிவேலு பிரச்சாரம் செய்ததற்கு இந்த சம்பவம்தான் காரணம்” என கூறியுள்ளார்.

  • Vidamuyarchi shooting completed அஜித்தே..இனி நம்ம ஆட்டம் தான்..விடாமுயற்சி படப்பிடிப்பு ஓவர்…இயக்குனர் வெளியிட்ட பதிவு..!
  • Views: - 535

    0

    0