அவன்லாம் ஒரு ஆளா?.. ட்ரம்ஸ் சிவமணியால் அசிங்கபட்ட வடிவேலு.. பேட்டரி காரில் பட்டபாடு..!

தமிழ் சினிமாவில் யாரும் எட்டக்கூடமுடியாத வகையில் மிகப்பெரிய காமெடி நடிகராக வலம் வந்தவர் வைகைப்புயல் வடிவேலு. தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத நகைச்சுவை நடிகரான இவர் எப்படிபட்ட காமெடியாக இருந்தாலும் தனது பாடி லேங்குவேஜ் மூலம் நிலைநிறுத்திடுவார்.

ஒவ்வொரு தலைமுறைக்கும் ஒவ்வொரு நகைச்சுவை நடிகர்கள் மாறுவது வழக்கம். ஆனால் வடிவேலுவுக்குப் பின் அடுத்தாக இவர் என சொல்ல முடியாத அளவுக்கு அவர் இருந்து வருகிறார். நடிகர் ராஜ்கிரண் தான் வடிவேலுவை தமிழ் சினிமாவில் அறிமுகம் செய்துவைத்தார். `என் தங்கை கல்யாணி’ படம் மூலம் சிறிய பாத்திரத்தில் தன் பயணத்தைத் துவங்கிய வடிவேலு தொடர்ந்து என் ராசாவின் மனசிலே, சின்ன கவுண்டர், சிங்கார வேலன், தேவர் மகன், காதலன், காதலர் தேசம் என தொன்னூறுகளின் இறுதியில் கவனிக்கப்படும் முகமாக மாறினார்.

அதன் பின்னர் , ரஜினி ,கமல் , அஜித், விஜய், பிரசாந்த் என பல முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்திருக்கிறார். இதனிடையே சமீப நாட்களாக நடிகர் வடிவேலு குறித்து அடுக்கடுக்கான புகார்கள் வந்த வண்ணம் உள்ளது. பணத்திமிரு, நான் தான் என்ற தலைக்கனம் உள்ளிட்டவை வடிவேலுவின் வாழ்க்கையை இன்னும் அழித்துக்கொண்டு தான் இருக்கிறது.

இந்நிலையில், சமீபத்தில் விஜயகாந்த் மரணம் அடைந்த போது கூட இறுதி அஞ்சலி செலுத்த வடிவேலு வரவில்லை என்று பல்வேறு விமர்சனங்களும் முன்வைக்கப்பட்டது. முன்னதாக வடிவேலுவின் வளர்ச்சிக்கு விஜயகாந்த் முக்கியமான காரணமாக இருக்கிறாரோ அதேபோல் தான் ராஜ்கிரனும் ஒரு முக்கியமான காரணம் என்று கூட பாராமல் அவரை சமீபத்தில் அவமதிக்கும் வகையில் வடிவேலு நடந்து கொண்டுள்ளார்.

அண்மையில், நடைபெற்ற கலைஞர் 100 நிகழ்ச்சி விழாவில் திரையுலகை சேர்ந்த பல நட்சத்திரங்கள் கலந்து கொண்டனர். விழா மேடைக்கு வரும் கார்கள் கார் பார்க்கிங்கில் இருந்து இரண்டு கிலோமீட்டர் தொலைவு என்பதால், அங்கிருந்து பேட்டரி கார் மூலம் முக்கிய திரை பிரபலங்கள் அழைத்து செல்லப்பட்டனர். ஆளுக்கு ஒரு பேட்டரி கார் அனுப்பப்படும் என நினைத்தார்கள் ஆனால், அந்த பேட்டரி காரில் ஆறு முதல் ஏழு பேர் வரை பயணம் செய்தார்கள். இதனால், ராஜ்கிரன் வந்த பேட்டரி காரில் ராஜ்கிரனுக்கு அருகே அமரும் சூழல் வடிவேலுக்கு ஏற்பட்டுள்ளது. இதனால், அந்த இடத்தில் வடிவேலு கடுப்பாகிவிட்டாராம். உடனடியாக, அந்த பேட்டரி காரை நிறுத்த சொல்லிவிட்டு காரில் இருந்து வடிவேலு இறங்கி விட்டாராம். அங்கிருந்து ராஜ்கிரனை வடிவேலு ஏறெடுத்து கூட பார்க்கவில்லை என கூறப்படுகிறது.

மேலும், வடிவேலுக்காக நின்றிருந்த காரில் இசையமைப்பாளர் ட்ரம்ஸ் சிவமணி தனது குடும்பத்துடன் ஏறிக்கொண்டார். அதனை கவனித்த அங்கிருந்தவர்கள். இது வடிவுகளுக்காக நிறுத்தப்பட்டு இருக்கும் கார் என்று சொன்னார்கள். அதற்கு, சிவமணியோ அவனெல்லாம் ஒரு ஆளா என ஒரே போடாக போட்டார். மேலும், அடுத்த அடுத்து வந்த காரில் வடிவேலு அமர பார்த்திபன் ஏறி பின்னால் இருந்த இருக்கையில் அமர்ந்து கொண்டார்.

அந்த சமயத்திலும், வடிவேலுவிடம் சிலர் நீங்கள் பின்னால் வரும் காரில் வாருங்கள் என சொல்ல வடிவேலுவும் அதன்படி செய்தார். இந்த சம்பவங்கள் நடக்கையில் வடிவேலுக்காக குரல் கொடுக்க யாருமே இல்லை. இதனை பார்த்த ரசிகர்கள் விஜயகாந்த் மட்டும் இன்றி தன்னை வளர்த்து விட்டவர்களை வடிவேலு மதிப்பதே இல்லை அப்படிப்பட்டவர்களுக்கு இப்படி நடப்பது தான் சரி, இனியாவது வடிவேலு தனது நடத்தையில் மாற்றத்தை கொண்டு வர வேண்டும் என கூறி வருகிறார்கள்.

Poorni

Recent Posts

அதிமுகவில் இருந்து கனத்த இதயத்துடன் வெளியேறுகிறேன்…. கோவை மாவட்ட முக்கிய பிரமுகரின் திடீர் அறிவிப்பு!!

கோவை அதிமுகவில் முக்கிய பிரமுகராக கண்டறியப்படுபவர் வடவள்ளி இன்ஜினியர் சந்திரசேகர். இவர் எம்ஜிஆர் இளைஞரணிச் செயலாளர் பொறுப்பில் பதவி வகித்து…

12 hours ago

ஸ்மார்ட் மீட்டரில் மிகப்பெரிய ஊழல்? ஆதாரங்களுடன் தயாராகும் அண்ணாமலை!

தமிழ்நாட்டில் மாத மாதம் கணக்கெடுக்கும் ஸ்மார்ட் மீட்டர் பொருத்தப்படும் என ஆட்சிக்கு வரும் போது 2021ல் திமுக வாக்குறுதியளித்தது. இது…

14 hours ago

ரசிகர் மன்றத் தலைவர் எடுத்த படம் மாதிரி இருக்கு- GBU-வை கண்டபடி கலாய்த்த பிரபலம்

ரசிகர்களுக்கான படம் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமார் நடித்த “குட் பேட் அக்லி” திரைப்படம் இன்று வெளியான நிலையில் இத்திரைப்படத்தை…

14 hours ago

கவுண்டமணியின் காரை இடிக்க வந்த வடிவேலுவின் கார்! இப்படியெல்லாம் நடந்துருக்கா?

வடிவேலு மீதான புகார்கள் வடிவேலு மிகப் பெரிய காமெடி நடிகராக வளர்ந்த பிறகு அவர் தனது சக நடிகர்களை மதிக்க…

15 hours ago

இணையத்தில் வெளியானது GOOD BAD UGLY… அதுவும் HD PRINT : பரபரப்பில் படக்குழு!

அஜித் நடிப்பில் இன்று வெளியானது குட் பேட் அக்லி, முதல் காட்சி முடிந்ததும் ரசிகர்கள் படத்தை கொண்டாடி வருகின்றனர். ஆனால்…

16 hours ago

அயோக்கியத்தனம்.. இதுதான் போலீஸ் ஸ்டேஷன் லட்சணமா? போனில் வெளுத்து வாங்கிய டிஐஜி வருண்குமார்!

அரியலூர் மாவட்டம், அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துவிட்டு மறுநாள் காவல் நிலையத்திற்கு வர வேண்டுமா என்பதற்காக அங்கு…

17 hours ago

This website uses cookies.