வடிவேலு விஜயகாந்தை பார்க்க வந்தால் தர்ம அடி விழும் – ஷாக் கொடுத்த பிரபலம்!

Author: Rajesh
29 December 2023, 12:16 pm

தேமுதிக தலைவர் விஜயகாந்த் கடந்த சில வருடங்களாகவே உடல்நலம் குன்றி வீட்டிலேயே முடங்கினார். நேற்று உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் மீண்டும் அனுமதிக்கப்பட்ட விஜயகாந்துக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தேமுதிக தலைமை தெரிவித்தது. மூச்சு விடுவதில் சிரமம் ஏற்பட்டுள்ளதால் வெண்டிலேட்டர் மூலம் செயற்கை சுவாசம் அளிக்கப்பட்டு சிகிச்சை கொடுக்கப்படுவதாக தெரிவித்தது.

vijayakanth-updatenews360

இதனிடையே, விஜயகாந்தின் உடல்நிலையில் பின்னடைவு ஏற்பட்டுள்ளதாகவும், நேற்று 9 மணிக்கு மருத்துவ அறிக்கை வெளியிடப்படும் என தெரிவிக்கப்பட்டிருந்தது. அதையடுத்து காலை விஜயகாந்த் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக மியாட் மருத்துவமனை நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியதாவது:- கேப்டன்‌ விஜயகாந்த்‌ அவர்கள்‌ நுரையீரல்‌ அழற்சி காரணமாக மருத்துவமனையில்‌ அனுமதிக்கப்பட்டு வென்டிலேட்டர்‌ ஆதரவுடன்‌ சிகிச்சை பெற்றிருந்தார்‌. மருத்துவ பணியாளர்களின்‌ கடின முயற்சி இருந்தபோதிலும்‌ அவர்‌ நேற்று காலை 28 டிசம்பர்‌ 2023 காலமானார்‌.” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

விஜயகாந்தின் மரணம் ஒட்டுமொத்த தமிழக மக்களையும் மிகுந்த வேதனைக்கு உள்ளாக்கியுள்ளது. குறிப்பாக அவர் பல பேருக்கு செய்துள்ள உதவிகள் குறித்து தொடர்ந்து பேசப்பட்டு வருகிறது இன்று திரைத்துறையில் மிப்பெரிய நடிகர்களாக இருந்து வரும் விஜய், தனுஷ் குடும்பம், வடிவேலு , சரத்குமார் என பல பேரை திரையில் ஜொலிக்க வைத்தவர் விஜயகாந்த்.

அப்படி ஒருவர் தான் வடிவேலு. வடிவேலுவுக்கு சின்னக்கவுண்டர் படத்தில் நடிக்கும் வாய்ப்பு கொடுத்தது மட்டுமின்றி, அவர் போட்டுக்கொள்ள நல்ல துணிகள் இல்லை என 5 செட் புதிய ஆடைகளை வாங்கி கொடுத்தாராம். ஆனால், நன்றி கெட்ட வடிவேலு அதை மறந்தது மட்டுமில்லாமல் விஜயகாந்தை பற்றி மேடையில் தரைகுறைவாக பேசி இழுபடுத்தியுள்ளார்.

ஆனால், கடைசிவரை விஜயகாந்த் ஒரு வார்த்தை கூட வடிவேலு குறித்து பேசவே இல்லை. மாறாக தன்னை சந்திக்க வரும் காமெடி நடிகர்களிடம் வடிவேலுவை தொடர்ந்து படங்களில் நடிக்கச்சொல்லுங்கய்யா அவர் பிறவி நடிகர் என கூறுவாராம். அப்படியிருந்தும் கடைசி வரை வடிவேலு விஜயகாந்த் உடலுக்கு அஞ்சலி செலுத்த வரவே இல்லை.

இது குறித்து பேட்டி ஒன்றில் பிரபல யூடியூப் விமர்சகர் அந்தகனிடம் கேட்டதற்கு, “விஜயகாந்த்துக்கு அஞ்சலி செலுத்த நடிகர் வடிவேலு வரமாட்டார். அவர் வந்தால் பிச்சு எடுத்துடுவாங்க: ஏனென்றால் விஜயகாந்த்தை வடிவேலு ரொம்பவே தரக்குறைவாக பேசியதை விஜயகாந்த் தொண்டர்களும் , ரசிகர்களும் இன்னும் மறக்கவே இல்லை. அவர்கள் எல்லாம் இன்று உச்சக்கட்ட உணர்ச்சி கொந்தளிப்பில் இருப்பார்கள். இந்த சமயத்தில் அஞ்சலி செலுத்த வடிவேலு வந்தால் கண்டிப்பாக அவருக்கு தர்ம அடி தான் விழும் என கூறினார் அந்தகன்.

  • Vidamuyarchi shooting completed அஜித்தே..இனி நம்ம ஆட்டம் தான்..விடாமுயற்சி படப்பிடிப்பு ஓவர்…இயக்குனர் வெளியிட்ட பதிவு..!
  • Views: - 531

    1

    0