வடிவேலுக்கு யாரு கை தட்டுறாங்களோ அவங்கள தான் கூட வச்சிப்பாரு – ஆதங்கத்தை கொட்டிய கொட்டாச்சி!

Author: Rajesh
30 December 2023, 4:54 pm

தமிழ் சினிமாவில் யாரும் எட்டக்கூடமுடியாத வகையில் மிகப்பெரிய காமெடி நடிகராக வலம் வந்தவர் வைகைப்புயல் வடிவேலு. தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத நகைச்சுவை நடிகரான இவர் எப்படிபட்ட காமெடியாக இருந்தாலும் தனது பாடி லேங்குவேஜ் மூலம் நிலைநிறுத்திடுவார்.

ஒவ்வொரு தலைமுறைக்கும் ஒவ்வொரு நகைச்சுவை நடிகர்கள் மாறுவது வழக்கம். ஆனால் வடிவேலுவுக்குப் பின் அடுத்தாக இவர் என சொல்ல முடியாத அளவுக்கு அவர் இருந்து வருகிறார். நடிகர் ராஜ்கிரண் தான் வடிவேலுவை தமிழ் சினிமாவில் அறிமுகம் செய்துவைத்தார். `என் தங்கை கல்யாணி’ படம் மூலம் சிறிய பாத்திரத்தில் தன் பயணத்தைத் துவங்கிய வடிவேலு தொடர்ந்து என் ராசாவின் மனசிலே, சின்ன கவுண்டர், சிங்கார வேலன், தேவர் மகன், காதலன், காதலர் தேசம் என தொன்னூறுகளின் இறுதியில் கவனிக்கப்படும் முகமாக மாறினார்.

vadivelu

அதன் பின்னர் , ரஜினி ,கமல் , அஜித், விஜய், பிரசாந்த் என பல முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்திருக்கிறார். இதனிடையே சமீப நாட்களாக நடிகர் வடிவேலு குறித்து அடுக்கடுக்கான புகார்கள் வந்த வண்ணம் உள்ளது. பணத்திமிரு, நான் தான் என்ற தலைக்கனம் உள்ளிட்டவை வடிவேலுவின் வாழ்க்கையை இன்னும் அழித்துக்கொண்டு தான் இருக்கிறது. அவ்வளவு ஏன் தன்னுடைய ஆரம்ப காலத்தில் சினிமாவில் வாய்ப்பு கொடுத்து… புத்தாடைகளை வாங்கி கொடுத்து உதவிய கேப்டன் விஜயகாந்த் மறைவுக்கு கூட அஞ்சலி செலுத்த வரவில்லை வடிவேலு.

திரைத்துறையில் வெறுக்கப்படும் பிரபலமாக வடிவேலு தொடர்ந்து இருந்து வருகிறார். இந்நிலையில் பிரபல காமெடி நடிகரான கொட்டாச்சி சமீபத்திய பேட்டி ஒன்றில் வடிவேலு குறித்த கேள்விக்கு, ” வடிவேலுக்கு யாரு கை தட்டுறாங்களோ அவங்கள தான் கூட வச்சிப்பாரு” அவருக்குனு ஒரு கேங்க் இருக்கு அவங்கள தவிர யாரும் அவருடன் நடிக்க முடியாது.

kottatchi

ஆனால், விவேக் சார் அப்படி இல்லை. யாரையும் பிரிச்சி ஒதுக்கவே மாட்டார். அவங்களுக்கு ஒரு குடும்பம் இருக்கு நம்ம பிரிச்சி ஒத்துக்கிட்டா அவன் குடும்பத்துக்கு எப்படி பசி ஆற்றுவான் என நினைப்பார். வடிவேலு பொறுத்தவரை அவரை விட யாரும் சிறப்பாக நடித்துவிடக்கூடாது. மீறி நடித்தால் ரீடேக் சொல்லிவிட்டு அந்த நபரை அடித்து பின்னால் போய் நிற்க சொல்லுவார் இது தான் வடிவேலு என தன் ஆதங்கத்தை கொட்டித்தீர்த்தார் கொட்டாச்சி. திரைத்துறையில் அனைவரும் கெட்டவன் என்று கூறியது வடிவேலுவாக மட்டும் தான் இருக்க முடியும்.

Vadivelu-க்கு யாரு கை தட்டுறாங்களோ அவங்கள தான் கூட வச்சிப்பாரு..| Actor kottachi Interview #shorts
  • thalapathy vijay vs thalapathy movie on same day தளபதியுடன் மோதும் தளபதி? அடேங்கப்பா, இது நம்ம லிஸ்ட்லயே இல்லையே!
  • Close menu