‘வைகைப்புயல்’ வடிவேலு சிறிய இடைவெளிக்குப் பிறகு மீண்டும் கதையின் நாயகனாக ‘நாய் சேகர் ரிட்டன்ஸ்’. படத்தில் நடித்து வருகிறார். இயக்குநர் சுராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் இந்த படத்தில், ஆனந்தராஜ், விக்னேஷ்காந்த்,லொள்ளு சபா சேஷு, ‘குக் வித் கோமாளி’ புகழ் நடிகை சிவாங்கி உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள். இந்தப் படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைக்கிறார்.
இதனிடையே, இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன், இயக்குநர் சுராஜ், கதையின் நாயகன் வடிவேலு ஆகியோரை லண்டனுக்கு வரவழைத்தது. அங்குள்ள பிரத்யேக பதிவரங்கத்தில் படத்திற்கான பாடல்களை இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன், படக்குழுவினருடன் கலந்துரையாடி உருவாக்கினர். சமீபத்தில் இந்த புகைப்படங்கள் வைரலாகின.
இந்நிலையில் இந்த படத்தில் வடிவேலுவுக்கு ஜோடியாக பிக்பாஸ் நடிகை ஷிவானி நாராயணன் நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இது குறித்த அறிவிப்புகள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.