எவ பேச்சை கேட்டு இப்படி பண்றீங்க…?பாரதிராஜாவை இழிவாக திட்டிய வடிவுக்கரசி – இருந்தாலும் இவ்வளவு அதுப்பா?

Author: Shree
18 May 2023, 5:43 pm

தமிழ் சினிமாவில் பிரபல நடிகையான வடிவுக்கரசி தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் மலையாளம் மொழிகளில் சுமார் 350 க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்து பெரும் புகழ் பெற்றிருக்கிறார். அத்துடன் பல்வேறு தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்திருக்கிறார். 1979ல் வெளியான கன்னிப் பருவத்திலே என்ற திரைப்படத்தில் நடித்து அறிமுகம் ஆனார். இப்படத்தில் வடிவுக்கரசி நடிகர் ராஜேஷுடன் கதாநாயகியாக நடித்திருந்தார்.

சினிமாவில் நடிக்க ஆரம்பித்த காலங்களில் கதாநாயகியாகவும், பின்னர் முன்னணி நடிகர்கள் பலருடனும் தாய், சகோதரி போன்ற கதாபாத்திரங்களும் ஏற்று நடித்திருக்கிறார். பின்னர் வில்லி கதாபாத்திரங்களில் நடித்து வந்த வடிவுக்கரசி மிகப்பெரிய அளவில் கவனம் ஈர்த்தார். குறிப்பாக ரஜினியின் அருணாச்சலம் திரைப்படத்தில் கிழவியாக நடித்து மிரட்டினார்.

இந்நிலையில் சமீபத்திய பேட்டி ஒன்றில் தனது திரைப்பயண அனுபவங்களை குறித்து பகிர்ந்துக்கொண்டார். அப்போது பாரதிராஜாவின் இயக்கத்தில் தான் ஒரு படத்தில் கமிட் ஆகி ஷூட்டிங்கிற்கு சென்ற பிறகு” நடிகர் விஜயகுமாருக்கு நீங்க ஜோடி என்று தானே கூறினேன். ஆனால் இப்போ சொல்றேன் விஜயகுமாருக்கு ஜோடியே வேண்டாம் அப்போ தான் நல்லா இருக்கும் என கதையை மாற்றி கூறினார்.

என்னது நான் ஹீரோயின் இல்லையா? யோவ்… இதை முன்னாடியே சொல்லவேண்டியதானே என கேட்டேன். அதற்கு அவர் நேத்து நைட் தான் இப்படி மாத்தி யோசித்தேன் என கூறினார். நான் உடனே விஜயகுமாருக்கு ஜோடியாக மஞ்சுளாவை போடப்போறாங்களோ என நினைத்துக்ண்டு ” எவ பேச்சை கேட்டு இப்படி பண்றீங்க. ” இல்லை எவள இந்த ரோலுக்கு போடப்போறீங்க”?

என ரொம்ப மோசமாக அவரை திட்டிவிட்டு உன் படத்தில் நடிக்கவே முடியாது என கூறிவிட்டு அங்கிருந்து அப்போவே கிளம்பி வீட்டுக்கு வந்துவிட்டேன். அதன் பின்னர் ரஜினியின் வீரா திரைப்படத்தில் அவருக்கு அம்மாவாக நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. எனவே ஒன்று நம்மை விட்டு சென்றால் அதை விட சிறந்த விஷயம் அமையும் என வடிவுக்கரசி கூறியுள்ளார். இந்த பிளாஷ்பேக் சம்பவம் தற்போது வைரலாகி வருகிறது.

https://www.facebook.com/watch/?v=956692442425435&ref=sharing

  • tvk leader vijay statement on waqf amendment bill இதுதான் பாஜகவின் பெரும்பான்மைவாத ஆதிக்க அரசியல்- அறிக்கையால் அலறவிட்ட தவெக தலைவர் விஜய்…