மனித தெய்வம் வடிவுக்கரசி…. என் புருஷன் வேற ஒருத்தியை கல்யாணம் பண்ணிட்டாங்க – நான் என்ன பண்ணேன் தெரியுமா?

Author: Shree
26 May 2023, 12:57 pm

தமிழ் சினிமாவில் பிரபல நடிகையான வடிவுக்கரசி தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் மலையாளம் மொழிகளில் சுமார் 350 க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்து பெரும் புகழ் பெற்றிருக்கிறார். அத்துடன் பல்வேறு தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்திருக்கிறார். 1979ல் வெளியான கன்னிப் பருவத்திலே என்ற திரைப்படத்தில் நடித்து அறிமுகம் ஆனார். இப்படத்தில் வடிவுக்கரசி நடிகர் ராஜேஷுடன் கதாநாயகியாக நடித்திருந்தார்.

சினிமாவில் நடிக்க ஆரம்பித்த காலங்களில் கதாநாயகியாகவும், பின்னர் முன்னணி நடிகர்கள் பலருடனும் தாய், சகோதரி போன்ற கதாபாத்திரங்களும் ஏற்று நடித்திருக்கிறார். பின்னர் வில்லி கதாபாத்திரங்களில் நடித்து வந்த வடிவுக்கரசி மிகப்பெரிய அளவில் கவனம் ஈர்த்தார். குறிப்பாக ரஜினியின் அருணாச்சலம் திரைப்படத்தில் கிழவியாக நடித்து மிரட்டினார்.

இந்நிலையில் சமீபத்திய பேட்டி ஒன்றில் தனது திரைப்பயண அனுபவங்களை குறித்தும் வாழ்க்கையில் நடந்த பல சோகமான சம்பவங்களை குறித்து பேசிய வடிவுக்கரசி, என் கணவர் என்னை விட்டுவிட்டு கிராமத்திற்கு சென்று வேறு ஒரு பெண்ணை திருமணம் செய்துக்கொண்டார். அவர்களுக்கு ஒரு பெண் குழந்தை பிறந்தது. சில பிரச்சனையால் அந்த குழந்தையை ஹாஸ்டலில் சேர்த்தார்கள். இது எனக்கு தெரியவந்ததும் நானே அந்த குழந்தையை தத்தெடுத்து வளர்த்து ஆளாக்கினேன். இன்று அவள் அமெரிக்காவில் குடும்பத்தோடு நல்ல வசதியாக வாழ்கிறாள் என வடிவுக்கரசி கூறியுள்ளார். இந்த காணொளி இணையத்தில் வைரலாக இவ்வளவு நல்லவரா? வடிவுக்கரசி என எல்லோரும் வியந்து பாராட்டி வருகிறார்கள்.

https://www.youtube.com/shorts/0xLMhAw86Dc

  • அஜித் ரசிகர்களுக்கு கிறிஸ்துமஸ் சர்ப்ரைஸ்..விடாமுயற்சி பாடல் லிரிக் எப்போ ரிலீஸ்-னு தெரியுமா..!
  • Views: - 495

    0

    0