சேடிஸ்ட்…. துன்பத்தில் இன்பம் காண்பவர் – விவாகரத்து குறித்து மனம் திறந்த வைக்கோம் விஜயலக்ஷ்மி!
Author: Shree10 June 2023, 4:55 pm
மலையாள குடும்பத்தில் பிறந்து வளர்ந்த வைக்கோம் விஜயலக்ஷ்மி குறுகிய காலத்திலேயே தென்னிந்திய சினிமாவின் பிரபல பாடகியாக வளர்ந்தார். 2013ம் ஆண்டு வெளியான செல்லுலாய்டு என்னும் மலையாளத் திரைப்படத்தின் மூலமாக இவர் திரைத்துறையில் அறிமுகமானார். பிறவியிலேயே பார்வைக் குறைபாடு கொண்ட இவர் முறையாக இசை கற்று திரைப்படங்களில் வாய்ப்புக்கிடைத்து பாடி வருகிறார்.
தமிழில் குக்கூ படத்தில் “கொடையில மழை போல ” என்ற பாடலின் மூலம் தமிழ் சினிமாவில் பாடகியாக அறிமுகமானார். தொடர்ந்து பல்வேறு ஹிட் பாடல்களை பாடியிருக்கிறார். “ஜெய் பீம்” திரைப்படத்தில் வரும் ‘மண்ணிலே ஈரம் உண்டு’ பாடலை பாடி மக்கள் மத்தியில் மிகப்பெரிய பாராட்டை பெற்றார்.
இவர் 2018ஆம் ஆண்டு மிமிக்ரி கலைஞர் மேரி அனுப் என்பவரை திருமணம் செய்து கொண்டார். திருமணம் ஆன சில வருடங்களிலேயே இவர்கள் விவாகரத்து செய்து பிரிந்துவிட்டார்கள். இந்நிலையில் முதன்முறையாக அதற்கான காரணத்தை வெளிப்படையாக கூறியிருக்கிறார் வைக்கோம் பாடகி விஜயலக்ஷ்மி,
அந்த பேட்டியில், எனக்கு திருமணமாகிய பின் தன்னுடைய வாழ்கை மிகவும் கண்ணீர் நிறைந்திருந்தாக இருந்தது. அவர் நான் பாடிய பாடல்களை விமர்சனம் செய்வது மட்டுமில்லாமல் எனக்கு பல்வேறு நிபந்தனைகளை விதித்து என்னை கொடுமை படுத்தினார். அவர் ஒரு ( சேடிஸ்ட்) ஆம், துன்பத்தில் இன்பம் காண்பவர் போல நடந்து கொண்டார். அதோடு என்னை என் குடும்பத்தினருடன் இருந்து பிரிக்க முயற்ச்சி செய்தார்.
யாராக இருந்தாலும் வாழ்க்கையில் ஓரளவுக்குத்தான் வலியை தாங்க முடியும். உதாரணமாக, ” ஒருவருக்கு பல் வலி ஏற்பட்டால் முடியும் பொறுத்துக்கொள்ளலாம் அதே வலி அதிகமானால் அதனை பிடுங்குவதை தவிர வேறு வழியில்லை.எனக்கு பாடல் பாடுவது மிகவும் பிடிக்கும். அது தான் என் வாழ்க்கை,
ஆனால், பாடுவதை இழந்த வாழ்க்கையை நான் வாழ விரும்பவில்லை என்று உருக்கமாக கசப்பான அனுபவிங்களை பகிர்ந்துக்கொண்டார்.