கடந்த சில நாட்களாக பாலியல் புகார்கள் குறித்து அடுத்தடுத்து பெண் பிரபலங்கள் பலரும் தங்கள் பாதிக்கப்பட்ட நபர்களை பொதுவெளியில் வெளிப்படையாக தெரிவித்து அவர்களை அசிங்கப்படுத்தி முகத்திரையை கிழித்து வருகிறார்கள் .
அந்த வகையில் பிரபல சர்ச்சைக்குரிய பாடகியான சுசித்ரா வைரமுத்துவை குறித்து பேசிய விவகாரம் பெரும் பூதாகாரத்தை கிளப்பியது. அதாவது வைரமுத்து தன்னை வீட்டுக்கு தனியாக வரச் சொன்னதாகவும் போன் பண்ணி பண்ணி வீட்டுக்கு அழைத்ததாகவும் பாடகி சுகிசித்ரா பகிரங்கமாக குற்றம் சாட்டியிருந்தார். இவரின் இந்த குற்றச்சாட்டுக்கு பதிலடி கொடுத்து தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள வைரமுத்து நீண்ட பதிவு ஒன்றை போட்டு அவரை கிழி கிழி என கிழித்து தள்ளி இருக்கிறார். அவர் கூறியிருப்பதாவது.
வாழ்வியல் தோல்விகளாலும்
பலவீனமான இதயத்தாலும்
நிறைவேறாத ஆசைகளாலும்
மன அழுத்தத்திற்கு உள்ளாகி
அதன் உச்சமாய்
மூளைப் பிறழ்வுக்கு ஆளாகும் சிலர்
ஒருதலையாய் நேசிக்கப்பட்டவர்கள்மீது
வக்கிர வார்த்தைகளை
உக்கிரமாய் வீசுவர்;
தொடர்பற்ற மொழிகள் பேசுவர்
பைத்தியம்போல் சிலநேரமும்
பைத்தியம்
தெளிந்தவர்போல் சிலநேரமும்
காட்சியளிப்பர்
தம்மைக் கடவுள் என்று
கருதிக்கொள்வர்
இந்த நோய்க்கு
‘Messianic Delusional Disorder’
என்று பெயர்
இதையும் படியுங்கள்: TRP-க்காக நடத்தப்பட்ட நாடகம்…. பிக்பாஸ் 8ல் மணிமேகலை – ஓஹோஹ் விஷயம் இதுதானா?
அவர்கள் தண்டிக்கப்பட
வேண்டியவர்கள் அல்லர்;
இரக்கத்திற்குரியவர்கள்;
அனுதாபத்தால்
குணப்படுத்தக் கூடியவர்கள்
உளவியல் சிகிச்சையும்
மருந்து மாத்திரைகளும் உண்டு
உரிய மருத்துவர்களை
அணுக வேண்டும். என ஆதங்கத்துடன் கூறி பதிவிட்டுள்ளார்.