“தம்பி மாரிமுத்துவின் மரண சேதி கேட்டு என் உடம்பு ஒரு கணம் ஆடி அடங்கியது” – வைரமுத்து இரங்கல்!

Author: Shree
8 September 2023, 11:31 am

ட்ரெண்டிங்கில் இருந்து வந்த நடிகர் மாரிமுத்துவின் மரணம் பலருக்கும் பேரதிர்ச்சியை கொடுத்துள்ளது. நடிகர், இயக்குநர் மாரிமுத்து (57) ‘எதிர்நீச்சல்’ தொடர் மூலம் மிகப்பெரிய அளவில் பிரபலமானார். பல படங்களிலும் நடித்திருக்கிறார். சமீபத்தில் வெளிவந்த ‘ஜெயிலர்’ படத்திலும் முக்கிய கதாபாத்திரம் ஒன்றில் நடித்திருந்தார்.

அடுத்ததாக கமல் ஹாசனின் இந்தியன் 2 படத்தில் நடித்துள்ளார். இந்நிலையில் இன்று காலை சீரியல் ஒன்றிக்காக டப்பிங் பேசிக்கொண்டிருக்கும்போதே திடீரென மாரடைப்பு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து அவர் தானாகவே காரை ஓட்டிச்சென்று வடபழனி சூர்யா மருத்துவமனையில் அட்மிட் ஆகியுள்ளார். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்துவிட்டதாக செய்திகள் கூறுகிறது.

இதையடுத்து அவரது உடல் சாலிகிராமத்தில் உள்ள அவரது இல்லத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. மேலும், இன்று மாலை, அவரது சொந்த ஊரான தேனிக்கு உடல் கொண்டு செல்லப்படவுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. இந்நிலையில் மாரிமுத்துவின் மரண செய்தி கேட்டு திரையுலகினர் பலர் அவரது இல்லத்திற்கு வந்து இறுதி அஞ்சலி செலுத்தி வருகிறார்கள்.

marimuthu

இந்நிலையில் மாரிமுத்துவின் மரணம் குறித்து ட்வீட் செய்துள்ள வைரமுத்து, ” தம்பி மாரிமுத்துவின் மரண சேதி கேட்டு என் உடம்பு ஒரு கணம் ஆடி அடங்கியது. சிகரத்தை நோக்கி சென்றுகொண்டிருந்தவனை மரணத்தின் பள்ளத்தாக்கு விழுங்கிவிட்டது. என் கவிதைகளின் உயிருள்ள ஒலிப்பேழை அவன். என் உதவியாளராக இருந்து நான் சொல்ல சொல்ல எழுதியவன். தேனியில் நான் தான் திருமணம் செய்துவைத்தேன். இன்று அவன் மீது இறுதி பூக்கள் விழுவது கண்டு இதயம் உடைகிறேன். குடும்பத்திற்கும், கலை அன்பர்களுக்கும் கண்ணீரை துடைத்து ஆறுதல் சொல்கிறேன் என வைரமுத்து பதிவிட்டுள்ளார்.

  • bussy anand shouted tvk volunteers video viral on internet Chair-அ கீழ வைடா டேய்- விஜய் மீட்டிங்கில் கொந்தளித்து கத்திய புஸ்ஸி ஆனந்த்! வைரல் வீடியோ