தமிழ் சினிமா உலகில் புகழ்பெற்ற திரைப்பட பாடலாசிரியராக திகழ்பவர் கவிஞர் வைரமுத்து. நிழல்கள் எனும் திரைப்படத்தில் பொன்மாலைப்பொழுது என்ற பாடலின் மூலம் தான் இவர் சினிமா துறையில் அறிமுகமாகி இருந்தார். அதனைத் தொடர்ந்து இவர் பல படங்களில் பாடல்களை எழுதி இருக்கிறார். மேலும், இவர் இதுவரை 7000 பாடல்களுக்கு மேல் எழுதி இருக்கிறார்.
இப்படி புகழின் உச்சத்தில் இருந்த கவிஞர் வைரமுத்து மீது பின்னணி பாடகி சின்மயி பாலியல் குற்றச்சாட்டு சாட்டி இருந்தது பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது. இதைத்தொடர்ந்து பல பெண்களும் கவிஞர் வைரமுத்து மீது செக்ஸ் புகார்களை அளித்து இருந்தார்கள். பிறகு வைரமுத்து குறித்து பல விமர்சனங்களை சின்மயி எழுப்பி இருந்தார். இருந்தாலும் பலர் வைரமுத்துக்கு ஆதரவாக குரல் கொடுத்து இருந்தார்கள். ஆனால், பாடகி சின்மயி கூறும் குற்றச்சாட்டில் உண்மை இருக்கிறதா? என்று சிலர் சந்தேகித்தும் வருகின்றனர்.
இந்நிலையில், வைரமுத்து பல படங்களுக்கு பாடல்கள் எழுதி, டபுள் மீனிங் அர்த்தங்களுடன் எழுதிய பாடல் வரியை நாம் பார்க்கலாம்.
2017 -ம் ஆண்டு மணிரத்னம் இயக்கத்தில் கார்த்தி நடிப்பில் வெளியான காற்று வெளியிடை படத்தில் இடம் பெற்றுள்ள சாரட்டு வண்டியில் பாடலில் “ஆணுக்கோ பத்து நிமிஷம் பொண்ணுக்கோ அஞ்சு நிமிஷம்” என்ற வரிகள் அமைந்திருக்கும். இது டபுள் மீனிங் அர்த்தங்களுடன் எழுதப்பட்டு இருக்கும்.
இதனிடையே, நடிகர் அஜித் குமார் சசி இயக்கத்தில் வெளியான அசல் படத்தில் பாவனாவிற்கும் அஜித்துக்கும் ரொமான்டிக் பாடல் அமைந்து இருக்கும். அந்த பாடலில் இரட்டை அர்த்தத்துடன் இருக்கும். “பூங்காவில் மழை வந்ததும், புதர் ஒன்று குடை ஆனதும், மழை வந்து நனைக்காமலே மடி மட்டும் நனைந்தாய் மறந்தது என்ன கதை” என்ற வரியை” வைரமுத்து இரட்டை அர்த்தங்களுடன் எழுதி இருப்பார்.
பிரசாந்த் ஐஸ்வர்யா ராய் நடிப்பில் 1998 -ம் ஆண்டு ஜீன்ஸ் திரைப்படம் வெளியானது. இதில் அன்பே அன்பே என்ற பாடல் இடம் பெற்று இருக்கும். இந்த பாடல் இரட்டை அர்த்தத்தில் வைரமுத்து எழுதியிருப்பார். “பெண்ணே உனது மெல்லிடை பார்த்தேன் அடடா பிரம்மன் கஞ்சனடி சற்றே நிமிர்ந்தேன் தலை சுற்றி போனேன் ஆஹா அவனே வள்ளலடி” என இடம் பெற்று இருக்கும்.
கேஜிஎஃப் கதாநாயகி யாஷ் நடித்த “கேஜிஎஃப்” திரைப்படத்தின் மூலம் சினிமாவிற்குள் அறிமுகமானவர் ஸ்ரீநிதி ஷெட்டி. இவர் தனது முதல் திரைப்படத்திலேயே…
கனவுக்கன்னி தற்கால இளைஞர்களின் கனவுக்கன்னிகளில் ஒருவராக வலம் வருபவர் மாளவிகா மோகனன். இவர் மலையாளத்தில் மிக பிரபலமான நடிகையாக வலம்…
தமிழ் திரைப்பிரபலங்களின் திடீர் மறைவு திரையுலகத்தை அதிர்ச்சிக்குள்ளாக்கி வருகிறது. அந்த வகையில் பிரபல திரைப்பட இயக்குநர் திடீரென மாரடைப்பால் மரணமடைந்துள்ளார்.…
தமிழக வெற்றி கழகம் கட்சியின் பூத் கமிட்டி முகவர்கள் கூட்டம் இன்று மாலை கோவை சக்தி சாலை குரும்பபாளையம் பகுதியில்…
விஜய்யின் ரோட் ஷோ தவெக தலைவர் விஜய் இன்று கோவையில் நடைபெறும் தனது கட்சியின் பூத் கமிட்டி மாநாட்டில் பங்கேற்கிறார்.…
This website uses cookies.