துப்பாக்கி பிடுங்கி….தந்திரமாக தளபதி இடத்தை பிடிக்க பார்க்கும் சிவகார்த்திகேயன்!

Author:
4 November 2024, 11:33 am

தமிழ் சினிமாவில் பிரபல இயக்குனராக இருந்து வரும் வெங்கட் பிரபு விஜய் நடிப்பில் கடைசியாக வெளிவந்த திரைப்படம் தான் “கோட்”. இந்த திரைப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக சினேகா மற்றும் மீனாட்சி சவுத்ரி உள்ளிட்டோர் நடித்திருப்பார்கள் .

Amaran Diwali winner

மேலும் விஜயுடன் பிரபுதேவா, பிரசாந்த், லைலா ,மோகன் ,யோகி பாபு உள்ளிட்ட பல நட்சத்திர பிரபலங்கள் இந்த திரைப்படத்தில் நடித்திருந்தார்கள். இந்த திரைப்படத்திற்கு பல வருடங்கள் கழித்து யுவன் சங்கர் ராஜா விஜயின் படத்திற்கு இசையமைத்திருந்தார் .

sivakarthikeyan

இந்த படத்தின் கிளைமாக்ஸ் காட்சியில் சிவகார்த்திகேயன் ஒரு சிறிய கேமியோ நடித்திருப்பார். அந்த காட்சி மிகப்பெரிய அளவில் சமூக வலைதளங்களில் பேசுபொருள் ஆனது. காரணம் அந்த காட்சியில் துப்பாக்கியை பிடிங்கி சிவா இனிமேல் எல்லாம் உங்க கையில தான் இருக்கு என்று விஜய் வசனத்தை சொல்லிவிட்டு செல்ல அதற்கு சிவா இதைவிட பெரிய வேலை எதுக்கோ நீங்க போறீங்க இதை நான் பார்த்துகிறேன் அதை நீங்க பாருங்க சார் அப்படின்னு சொல்லுவாரு.

Siva Amaran Diwali

சிவகார்த்திகேயன் பேசிய இந்த வசனத்திற்கு விஜய் கைகாட்டி விட்டு செல்வார்.. விஜய் சிவகார்த்திகேயன் இருவருக்கும் இடையே இந்த காட்சி இணையத்தில் மிகப்பெரிய அளவில் பேசு பொருளானது. காரணம் சிவகார்த்திகேயன் தான் அடுத்த தளபதி விஜய் என்று இந்த காட்சியின் மூலம் விஜய் சொல்லி இருப்பார் என பலரும் தெரிவித்து வந்தனர் .

sivakarthikeyan

தற்போது இந்த காட்சி குறித்து பேசி இருக்கும் வலைப்பேச்சு அந்தகன்… வெங்கட் பிரபு சிவகார்த்திகேயன் வைத்து அடுத்ததாக ஒரு படத்தை எடுக்க போகிறார். இதனால் கோட் படத்தில் அவருக்கு ஒரு காட்சி வைத்தால் அடுத்த படத்திற்கு ஒரு பெரிய பிரமோஷன் ஆகவும் விளம்பரமாகவும் அமையும் என்று நினைத்துதான் அந்த காட்சியில் சிவகார்த்திகேயன் நடிக்க வைத்தார்.

மேலும் படிக்க: விதி இப்படி ஆயிடுச்சு.. இதனால தான் என் பொண்ணு சினிமாவுக்கு வரல.. ஊர்வசி ஓபன் டாக்..!

இப்படி ஒரு காட்சி இருக்கு என்று அதில் சிவகார்த்திகேயன் நடிக்கப் போகிறார் என்று சொன்னது எல்லாமே இயக்குனர் வெங்கட் பிரபு தான். அப்படி இருக்க விஜய் இந்த வசனத்தை வையுங்கள்…இந்த நடிகரை போடுங்க என்று சொல்லவில்லை. ஆனால் படம் வெளியான பிறகு அந்த காட்சியை பார்த்த பிறகு விஜய் சினிமா கெரியரை மொத்தமாக சிவகார்த்திகேயன் கையில் கொடுத்தது போல ஒரு பில்டப்பை சிவகார்த்திகேயனே உருவாக்கிக் கொண்டார்.

Diwali winner 2024

அதுதான் சிவகார்த்திகேயனிடம் இருக்கும் தந்திரம். இதனால் தான் ரஜினி கமல் போன்ற பெரிய நடிகர்கள் இதுபோன்ற நடிகர்களை தங்களது படத்தில் சேர்ப்பது கிடையாது. தனுஷ் பல வருடங்களாக ரஜினியுடன் சேர்ந்து ஒரு திரைப்படத்தில் ஒரு காட்சியிலாவது நடித்து விட வேண்டும் என காத்துக் கொண்டிருக்கிறார் .

sivakarthikeyan

மருமகனாக இருந்தும் கூட ரஜினி அதற்கு வாய்ப்பே கொடுக்கவில்லை. அதேபோல் சிவகார்த்திகேயனுக்கும் ரஜினி அந்த வாய்ப்பை கொடுக்கவில்லை. நன்றாக தெரிந்த பெரிய ஹீரோக்கள் இதனால் தான் வளர்ந்து வரும் நடிகர்களை தங்களது படத்தில் போடவே மாட்டார்கள் என கூறுவது கூறினார் அந்தகன். எனவே இந்த அடுத்த தளபதி விஷயத்தை சிவகார்த்திகேயன் தனக்குத்தானே உருவாக்கிக் கொண்ட விளம்பரம் என அந்தகன் அந்த பேட்டியில் கூறியிருப்பது குறிப்பிடத்தக்கது.

  • Vidamuyarchi shooting completed அஜித்தே..இனி நம்ம ஆட்டம் தான்..விடாமுயற்சி படப்பிடிப்பு ஓவர்…இயக்குனர் வெளியிட்ட பதிவு..!
  • Views: - 102

    0

    0